Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

பிறப்பு பதிவு விவரத்தை ரூ.7 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் வழங்க ராஜபாளையம் நகராட்சி ஆணையருக்கு - நுகர்வோர் நீதிமன்றம் ஆணை

பிறப்பு பதிவு விவரத்தை ரூ.7 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் வழங்க ராஜபாளையம் நகராட்சி ஆணையருக்கு -  நுகர்வோர் நீதிமன்றம் ஆணை  :


பிறப்பு பதிவு விவரத்தை ஒரு மாதத்திற்குள், ரூ.7 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் வழங்க ராஜபாளையம் நகராட்சி ஆணையருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது
சிவகாசி, சாட்சியாபுரம், என்.ஜி.ஓ.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கா.ராஜூ. இவரது மனைவி சாந்தி, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 20.4.1973-ம் தேதி பிறந்துள்ளார். ஆனால் இவரது கல்விச் சான்று அனைத்திலும் பிறந்த தேதி 13.5.1972 என்று தவறுதலாக பதிவு செய்துள்ளார்கள்
இந்நிலையில் சாந்திக்கு தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் பணி கிடைத்துள்ளது. இவரது பணிப் பதிவேட்டில் கல்வித் சான்றிதழ்களின் அடிப்படையில் பிறந்த தேதி 13.5.72 என்று பதிவாகியுள்ளது.
சாந்தி, தனது பணிப் பதிவேட்டில் உள்ள தவறுதலான தேதியை நீக்கிவிட்டு, அவருடைய உண்மையான பிறந்த தேதியான 20.4.1973-யை பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுமென்று சென்னையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநருக்கு விண்ணப்பித்தார்.
கல்லூரி கல்வி இயக்குநர் அலுவகத்திலிருந்து, சாந்தியின் பெற்றோருக்கு பணிப் பதிவேட்டில் பதிவாகியுள்ள தேதியில் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்பதற்கு உரிய அலுவலரிடமிருந்து ஆதாரம் பெற்று அனுப்பவேண்டும் என்று தகவல் அனுப்பியுள்ளார்கள்.
இதனையடுத்து ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாந்தியின் பெற்றோருக்கு 13.5.72-ம் தேதி குழந்தை பிறக்கவில்லை என்பதற்கான சான்று பெறுவதற்காக ரூ.106 கட்டணம் செலுத்தி 7.10.2015-ம் தேதி விண்ணப்பித்துள்ளார்கள். இதற்கு எந்த சான்றிதழும்.வழங்கப்படவில்லை.16.12.2015-ம் தேதி ஆணையரை நேரில் அணுகி இது குறித்து கேட்டபோது, 7.10.15-ம் தேதி கொடுத்த மனு தொலைந்துவிட்டது. மீண்டும் மனு கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதன் பேரில் 16.12.15-ம் தேதி மீண்டும் ரூ.84 கட்டி விண்ணப்பித்துள்ளார்.
இதற்கான ஒப்புகை சீட்டும் நகராட்சி அலுவலகத்தில் கொடுத்துள்ளார்கள். சாந்தியின் பெற்றோருக்கு 13.5.72-ம் தேதி குழந்தை பிறந்ததாக நகராட்சி பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து எந்தவிதப் பதிலோ சான்றிதழோ தரவில்லையாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜூ முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் அளித்த தீர்ப்புரை:
சாந்தியின் பெற்றோருக்கு 13.5.1972-ம் தேதி குழந்தைகள் பிறந்ததற்கான பதிவுகள் ராஜபாளையம் நகராட்சி அலுவலக பிறப்பு பதிவேட்டில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்த சான்றிதழை 1 மாத காலத்திற்குள் ஆணையர் வழங்க வேண்டும். மேலும் இவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல்மற்றும் மனக்கஷ்டத்திற்கு ஆணையர் ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த 1 மாதத்திற்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Dinamani  Published on : 23rd March 2017 06:49 PM