Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

இனி, விபத்து காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாது!’ சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

"இனி, விபத்து காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாது!' 
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி


வங்கி, குறிப்பிட்ட தொகையை வட்டியோடு சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு மாதத் தவணையாக வழங்கி செட்டில்மென்ட் செய்யும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி இழப்பீட்டுத் தொகையிலிருந்து கடனுதவியோ, முன்பணமோ அல்லது முழுத்தொகையையோ பெற முடியாது.

விபத்தால் காயமடைந்தால், அதற்கான காப்பீட்டுத் தொகையை இனி பெரிய தொகையாகப் பெற முடியாதென்றும், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதத் தவணைகளாக வங்கிக்கணக்கிலிருந்து மட்டுமே பெறமுடியும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே விபத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, காப்பீடு கேட்டு விண்ணப்பித்தது தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், கடந்த மார்ச் 5-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரியமுறையில் இழப்பீடு கிடைப்பதற்காக, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வருடாந்தர முதலீட்டுத் திட்டம் (Motor Accident Claims Annuity Deposit Scheme (MACAD)) செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தத் திட்டத்தின்படி, விபத்தில் காயமடைந்தவருக்கான இழப்பீட்டை உடனடியாகப் பெற முடியாது. முதலில், அவர் பெயரில் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள தேசிய வங்கியில் சேமிப்புக்கணக்கு ஒன்று புதிதாகத் தொடங்கப்படும். அந்த வங்கிக்கணக்கில், அவருக்கான காப்பீட்டுத்தொகை மாதந்தோறும் அளிக்கப்படும். அதை நேரடியாக வங்கிக்குச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி, இழப்பீட்டுத் தொகையிலிருந்து கடனுதவியோ, முன்பணமோ அல்லது முழுத்தொகையையோ பெற முடியாது. பாதிக்கப்பட்டவரோடு இணைந்து வேறு யாரையும் இந்த வங்கிக்கணக்கில் சேர்க்க முடியாது. இந்தப் பணத்தை கையாளுவதற்கு வங்கிக் காசோலையோ, ஏடிஎம் கார்டோ வழங்கப்பட மாட்டாது. இந்தத் திட்டம், வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இந்தத் திட்டத்தில், மாதத் தவணையைப் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு, காசோலையைப் பயன்படுத்த முடியாது என்பதால், விபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, நடப்பதற்கே சிரமப்படும் ஒருவரால், அந்தத் தொகையை எவ்வாறு வங்கியில் எடுக்க முடியும்? அதேபோல விபத்துக்கான இன்ஷூரன்ஸ் தொகையைப் பெறுவதற்கான வழக்கே ஆண்டுக்கணக்கில் நடந்து, அதன்பின்னர் மாதத் தவணையாக சிறுகச்சிறுக அந்தத் தொகையைப் பெற நேர்ந்தால், அது பயனளிக்குமா என்பதும் கேள்விக்குறியே.

இதுகுறித்து வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷிடம் கேட்டபோது, 

"ஏழ்மையில் உள்ளவர்களை இந்தத் திட்டம் பாதிக்கக்கூடும். 

பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாகவும் முழுமையாகவும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டால்தான் சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும். 

இந்தத் திட்டப்படி, சிகிச்சை செலவுக்கான கூடுதல் தொகையை வங்கிக் கணக்கிலிருந்து பெறுவதற்கு நீதிமன்றத்தை அணுக வேண்டும். 

நீதிமன்றத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறுவதென்பது, விபத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுத்தக்கூடும்"  என்றார்.


நன்றி : விகடன் செய்திகள் - 21.08.2019