Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

யார் சண்டாளர் ?

யார் சண்டாளர் ??

சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது "கலப்பு மணம் புரிதல் இன்று ஒரு புரட்சிகரமான காரியமாகப் பலர் கருதுகின்றனர்.
"நால்வருண சமுதாயம் அதற்கு அவசியமான, ஆனால் இழிவான தொழில்களைச் செய்வதற்காக சண்டாளர் என்ற ஐந்தாவது ஒரு பிரிவினரை (பஞ்சமர்) வருண அமைப்புக்கு வெளியே தோற்றுவித்தது.


சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது.

சண்டாளர் - Chandāla
1901 கணக்கெடுப்பில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்களைச் சண்டாளரெனப்பதிந்துள்ளனர். இச்சொல், தாழ்ந்த சாதியாரைக்கூடத் தீட்டுப்படுத்துபவன் என்ற பொருளில் ஒரு சாதியாரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. "இது பிராமணர்களின் சமுதாயச் சட்டங்களைச் செய்தவர்களின் சகிப்புத்தன்மை இன்மையை விளக்குவதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. சாதிகள் எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதியாகச் சண்டாளன் என ஒரு சூத்திர ஆணுக்கும் ஒரு பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவனை வகுத்து, அதே சமயம் ஒரு பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவனைச் சாதிக் கலப்பின் கூட்டுறவால் பிறந்தவர்களுள் உயர்ந்த சாதிக்காரனாக வகுத்துள்ளது. அவர்களுடைய இந்த மனப்பான்மை யைத் தெளிவுறுத்தும்" எனச் சர்ஜன் மேஜர் டபிள்யூ. ஆர். கார்னிஷ் எழுதியுள்ளார். சண்டாளர், ஸ்வபகர் ஆகியோர் குடியிருப்புக்கள் நகருக்கு வெளியே இருக்கவேண்டும். அவர்கள் முழுமையாக உள்ள பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. நாய்களும், கழுதைகளுமே அவர்களுடைய செல்வம். நோயாளி களின் மேலாடையே அவர்களுக்கு உடை, உடைந்த பானை களே அவர்கள் உண்ணும் கலம். துருப்பிடித்த இரும்பே அவர்கள் அணியும் நகை. அவர்கள் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்தபடி இருத்தல் வேண்டும். சமுதாய, சமயப் பொறுப்பினை உணர்ந்த எந்த மனிதனும் அவர்களோடு எத்த கைய உறவையும் கொள்ளுதல் கூடாது. அவர்களுக்கு உணவு இடுபவர்கள் மண்பாண்ட உடைசல்களிலிருந்து இடுதல் வேண்டுமே அல்லாமல் கையினால் இடுதல் கூடாது" என மனு விதித்துள்ளார். *1871 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை, (Madras Census) .

Source: tamilpulavar.org/சண்டாளர்