Cheque bounce cases:
காசோலை மோசடி வழக்கில், நான் எதிரிக்கு நடத்தி, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும், அப்பீல் நீதிமன்றம், இரண்டிலும் வெற்றி !
#########################################
தேவைப்படுபவர்கள், கீழே உள்ள, இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
==================================
வழக்கின் சுருக்கம் :-
----------------------
எதிரி, 2006-2007 முதல், புகார் மனுதாரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி, மாதம், பத்தாயிரம் வீதம் காசோலை மூலம் திருப்பி தருகிறார். திடீர் என்று, 2011 ல் கை மாத்து கடனாக 5,30,000/- கடன் வாங்கி, திருப்பி காசோலை மூலம் தருகிறார், அதுவும் வசூல் ஆகவில்லை என்று வழக்கு.
காசோலை மோசடி வழக்கில், மிக முக்கியமாக எதிரி ஜெயிக்க, புகார் மனுதார் தாவா கடனை தரவில்லை என்று நிரூபிக்க முடிந்தால், ஒரு வலுவான சந்தேகத்தை கிளப்பினால், அதன் பின்பு, அந்த கடனை நிரூபிக்க வேண்டிய சூழல், புகார் மனுதாருக்கு ஏற்படும். அப்படி, எதிரி, வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி விடுதலை ஆன வழக்குதான் இது.
கையெழுத்து, ஒத்து கொண்டோம். என்.ஐ.சட்ட பிரிவு 20 படி, காலி காசோலையை, காசோலை வைத்திருப்பவர், (கடன் கொடுத்தவர் தவிர, யார் வேண்டுமானாலும், அதை கையில் வைத்திருப்பவர்) அதை நிரப்ப அதிகாரம் உண்டு. பொதுவாக காசோலையை கையெழுத்து போட்டதை ஒத்து கொண்டாலே, எதிரிக்கு எந்த defence இல்லை என்றும் தீர்ப்பு உண்டு.
இந்த வழக்கில், மிக பெரிய ப்ளஸ் பாயின்ட், எதிரி, புகார் மனுதாருக்கு மாதா மாதம் பத்தாயிரம் காசோலை வழங்கி வந்தார். அதை, புகார் மனுதாரின் வங்கி மேலாளரை, நீதிமன்றத்துக்கு, எதிரி தரப்பு சாட்சியாக அழைத்து விசாரித்தேன். அது போக, எதிரி வைத்திருந்த வங்கி கணக்கு freeze ஆகி, க்ளோஸ் ஆகி விட்டது. அந்த வங்கிக்கு திரும்ப சென்று, பேங்க் statement எடுத்து வர சொல்லி, ஆவணம் குறியீடு செய்தேன். எதிரி வங்கி மேலாளரை விசாரிக்கும்போது, வழக்கு காசோலை ஐந்து வருடத்துக்கு முந்தையது என்று ஒத்து கொண்டார். அதாவது, அது செக்யூரிட்டியாக கொடுத்த காசோலை. அதுதான், வழக்கின் மிக பெரிய defence. அதை நீதிமன்றம் ஏற்றது.
மேலும், புகார் மனுதார், வட்டிக்கு பணம் கொடுப்பவர். அவர் பாண் ப்ரோக்கர் லைசன்ஸ் ஏதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
ஐம்பதாயிரத்துக்கு மேல் பணம் கொடுத்தால், காசோலை மூலம்தான் கொடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
புகார் மனுதார், வட்டிக்கு பணம் இவ்வளவு நாள் கொடுத்து விட்டு, தற்போது, கை மாத்தாக கொடுத்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதுவும் பெரிய தொகை. இதில் முக்கியமான பாயின்ட், 2010 ல் பத்தாயிரத்துக்கு கொடுத்த காசோலை வசூல் ஆகவில்லை. அதன் பிறகு, 2011 ல் திடீர் என்று, ஒரு பெரிய தொகை கடன் என்பதும், சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எந்த சாட்சியும் விசாரிக்கவில்லை. எந்த supportive document குறியீடு செய்யப்பட வில்லை.
அந்த கடன் கொடுத்த வருடத்துக்கு, வருமான் வரியில், இந்த தொகையை, புகார் மனுதார் கடன் என்று காண்பித்து உள்ளாரா என்பதற்கு, எந்த வித வருமான வரி returns தாக்கல் செய்யவில்லை.
கடைசி காசோலை, அதாவது வழக்கு காசோலை, டைப் செய்யப்பட்டு இருந்தது. அப்படியானால், இதற்கு முன், எதிரி கொடுத்த காசோலை அனைத்தும் அப்படி இருந்ததா என்று சந்தேகம் எழுப்பப்பட்டது. அதுவும், எதிரி வீட்டில் காலை எட்டு மணிக்கு, டைப் செய்த காசோலை வழங்கப்பட்டது என்பதும், சந்தேகத்தை வலுப்படுத்தியது.
மேலும், புகார் மனுதாரர் அனுப்பிய வக்கீல் நோட்டிசுக்கு, போஸ்டல் ரசீது மற்றும், எதிரி அதை பெற்று கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையும் தாக்கல் செய்யப்படவில்லை. நோட்டிஸ் அனுப்பட்டு, அது எதிரிக்கு serve ஆனால்தான், காசோலை மோசடி வழக்கு வரும் என்று தீர்ப்பு உள்ளது.
மேலும், எதிரி என்ன நோக்கத்துக்கு கடன் வாங்கினார் என்பதும், வழக்கறிஞர் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. புகார் மனுவில் ஒரு காரணமும், புகார் மனுதார் தாக்கல் செய்த முதன்மை நிரூபன வாக்குமூலத்தில் மாற்றி சொல்லப்பட்டு இருந்தது.
மேலும், எதிரி, லாட்ஜ் நடத்தி வருகிறார். லாட்ஜ் பராமரிப்பு செலவுக்கு கடன் வாங்கி இருந்ததாக புகார் மனுதார் சொல்லி இருந்தார். ஆனால், மதுரையில், லாட்ஜ், மத்தியில் உள்ளது. சில கோடி மதிப்பு பெரும். அதனால், இந்த காசோலை தொகை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தேசிய வங்கியில் எளிதாக கடன் கிடைத்திருக்கும் என்ற வாதமும், கடன் தொகை பற்றி சந்தேகத்தை கிளப்பியது.
மேலே சொன்னது போல, வலுவாக சந்தேகத்தை கிளப்பினால், அது நீதிமன்றம் ஏற்கும்படி, சட்டப்படி இருக்கும்போது, புகார் மனுதார்தான் வழக்கை நிரூபிக்க வேண்டும். இதில் அவர் தவறி விட்டார் என்று இரண்டு நீதிபதிகளும், சரியாக புரிந்து கொண்டு, சரியான தீர்ப்பு வழங்கியது எதிரி மற்றும் என்னுடைய அதிர்ஷ்டம்.
வழக்கை நீங்களும் எப்படி நடத்தலாம் என்பதற்காகவே, வழக்கின் முக்கிய சாராம்சம் மேலே சொல்லப்பட்டு உள்ளது. பயன்படுத்தி, சட்டம் தெளிவோம் !
காசோலை மோசடி வழக்கில், நீதிமன்றம், இரண்டு பக்கமும் மாறி மாறி தீர்ப்பு சொல்லி வருகிறது. எதிரி, இரண்டு நீதிமன்றங்களிலும், விடுதலை ஆன அரிதான வழக்குகளில், இதுவும் ஒன்று.
இந்த வழக்கு, அடுத்து உயர்நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு உண்டு !
