வழக்கறிஞர் என்றால் வாதாடுவது போராடுவது மட்டுமல்ல.....
வழக்கறிஞர் என்றால் சமுதாய சீரழிவுகளையும் சரிசெய்ய துடிக்கும் சாணக்கியன்....
வழக்கறிஞர் என்றால் தன்முன் வன்முறையே நடந்தாலும் தன்னிலை மாறாமல்-பிறழாமல் சட்டத்தை காக்கும் காவலன்...
எதிரியும்
துயரமென தன்னை நாடி வந்தால் அவன் துயரத்தையும் துடைக்கும் தூயவன்....
தன்னை நம்பி வந்தவர்களுக்கு தன்னுயிரையும் கொடுத்து காக்கும் ஏகலைவன்....
கடவுளுக்கு அடுத்தபடியாக ஓர் உயிரை மரணத்திலிருந்து மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் மாயவன்....
ஏழ்மையான வாதிகளுக்கு வழக்கு கட்டணத்தை கூட வாங்காமல் சில நேரங்களில் அவர்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து அள்ளிக்கொடுக்கும் கர்ணன்....
இந்த தொழிலை சேவையாக செய்யும் தங்களுக்கும் தங்களுக்கு ஒத்துழைப்பு தந்துவரும் தங்கள் குடும்பத்தாருக்கும் ""வழக்கறிஞர்கள் தின வாழ்த்துகள்"".....
உங்களில் ஒருவனாக வழக்கறிஞர் சரவணன் ராஜேந்திரன்
