Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

செல்லாததாகும் உயில் வழி கொடைகள் !( Void Bequests)

செல்லாததாகும் உயில் வழி கொடைகள் !( Void Bequests)
=========================
முறைப்படி உருவாக்கப்பட்ட உயில் வழி கொடைகள், சில காரணங்களால் செல்லாததாகி விடும். 

1. உயில் எழுதி வைத்தவரின் கையொப்பத்திற்கு உயிலில் சாட்சி கைஒப்பமிட்டவருக்கு கொடுக்கப்பட்ட உயில் வழி கொடை செல்லாததாகும். உயிலுக்கு யார் வேண்டுமானாலும் சான்றோப்பமிடலாம். ஆனால், அவர் அவ்வுயில் மூலம் கொடை பெருனராகவோ, பயனடைபவராகவோ இருக்க கூடாது. உயிலுக்கு சான்றோப்பமிடுபவரின் மனைவிக்கோ, கணவனுக்கோ அல்லது அவர்கள் இருவர் வழியாக உரிமை பெறும் எவருக்கும் கொடுக்கப்பட்ட கொடை செல்லாததாகும். - பிரிவு 67, இந்திய வாரிசுரிமை சட்டம். 

2. உயில் எழுதி வைத்தவரின் தெளிவான என்னத்தை தெரிவிக்காத எந்த கொடையும் செல்லாது - பிரிவு 89

3. உயில் எழுதி வைத்தவர் இறந்த நாளில் உயிரோடில்லாத ஒருவருக்கு கொடுத்த கொடை செல்லாது - பிரிவு 112 

எடுத்துக்காட்டு 
----------------------
1. 'அ' என்பவர், 'ஆ' யின் மூத்த மகனுக்கு ரூ. 1௦௦௦/- ஐ உயில் வழி கொடையாக கொடுத்தார். 'அ' இறக்கும்போது 'ஆ' க்கு மகன்களே கிடையாது. உயில் வழி கொடை செல்லாததாகும். 

2. 'அ'' என்பவர் ரூ.1௦௦௦/- ஐ, 'ஆ' க்கு வாழ்நாள் அனுபவத்திற்கும் 'ஆ' இறந்து உடன், 'இ'யின் மூத்த மகனுக்கு கொடுக்க வேண்டும் என்றும் உயில் வழி கொடையாக கொடுத்தார். 'அ' இறக்கும்போது 'இ' க்கு மகன்களே கிடையாது. பின்னர், 'ஆ' வின் வாழ்நாளில் 'இ'க்கு 'ஈ' எண்ணும் மகன் பிறந்தான். 'ஆ' இறக்கும் முன் 'ஈ' இறந்து விட்டான். ' ஈ' யின் பிரதிநிதிகளுக்கு இந்த கொடை செல்லும். 

3. 'அ' என்பவர் தம்முடைய நன்செய் நிலங்களை 'ஆ' க்கு வாழ்நாள் அனுபவ பாத்தியமாகவும் 'ஆ' இறந்தவுடன் 'இ' யின் மூத்த மகனுக்கு கொடுத்து விட வேண்டுமென்றும் உயில் வழி கொடையாக எழுதி வைத்தார். 'ஆ' இறக்கும் நாள் வரை 'இ' க்கு மகன்களே கிடையாது. '' யின் மொத்த மகனுக்கு என்று கொடுக்கப்பட்ட கொடை செல்லாததாகும். 

4. 'அ' என்பவர் ரூ. 1௦௦௦/- ஐ 'ஆ' இறந்த உடன் 'இ' யின் மூத்த மகனுக்கு கொடுக்கும்படி உயில் வழி கொடை எழுதி வைத்தார். 'அ' யாக்கும் பொது, 'இ' க்கு மகன் கிடையாது. ஆனால், பின்னர், 'ஆ'யின் வாழ்நாளில் 'இ' க்கு ஒரு மகன் பிறந்து, 'ஆ' இறக்கும் வரையில் உயிருடன் இருந்தான். 'இ' யின் மகன் ரூ. 1௦௦௦/- ஐ கொடையாக பெறுவான். 

வழக்கு தீர்வுகள் :

உயிலை எழுதி வைத்தவர் தனது மகள்களுக்கு வாழ்நாள் அனுபவர் பாத்தியமும் அவர்களின் பதிலாள் நியமன அதிகாரத்திற்கு உட்பட்டு, அவர்களுக்கு பின் உயிலை எழுதி வைத்தவர் இறந்த நாளில் பிறக்க இருக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் கொடையை எழுதி வைத்தவர் அதில் ஒரு நிபந்தனையையும் அவர் எழுதி இருந்தார். அதாவது, அந்த பிள்ளைகளில் எவரேனும் பார்சி மதத்தை விட்டு வேறு மதத்தை தழுவினாலும், அல்லது பார்சியர் அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் அவர் பங்கு பறிமுதல் செய்யப்படும் என்பதால், அந்த நிபந்தனை. இது கொடை பெறுபவருக்கு முழு உரிமையையும் கொடுக்காததால், இக்கொடை செல்லாது என்று பிரிவி கவுன்சில் தீர்ப்பு அளித்தது. Putlibai Vs Sorabji, 24 Bom. L.R. 1099

(உயில்கள் சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து)