Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

சுவரில் நீர் கசிவு பிரச்னைஇழப்பீடு வழங்க உத்தரவு



சுவரில் நீர் கசிவு பிரச்னைஇழப்பீடு வழங்க உத்தரவு
===============================================


சுவரில் நீர் கசிவு பிரச்னையில், தொழில்நுட்ப நிறுவனம், வீட்டு உரிமையாளருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்தர்குருபதன் சிங் தாக்கல் செய்த மனு:
என் வீட்டில், மழை நீர் கசிவை சரி செய்ய, மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்தில், 6.50 லட்சம் ரூபாய் செலுத்தி, ஒப்பந்தம் செய்தேன். குறைபாடுகளை முழுவதுமாக சரி செய்யவில்லை.மாடி சுவர்களில், மேற்கூரையில் நீர் கசிவு நின்றபாடில்லை. நிறுவனத்திடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. நீர் கசிவை சரி செய்ய கொடுத்த தொகையுடன், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில், கோரியிருந்தார்.
விசாரணையில், 'திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை வைத்து, சுவர் விரிசல் சரி செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி மோனி பிறப்பித்த உத்தரவு:தொழில்நுட்ப நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது.வீட்டு சுவரில் நீர்கசிவை சரி செய்ய, மனுதாரர் செலுத்திய தொகையில், இரண்டு லட்சம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவும் மனுதாரருக்கு, தொழில்நுட்ப நிறுவனம் வழங்க வேண்டும் என, கூறப்பட்டது.

Source: .dinamalar. ஜூலை 04, 2018 
------------------------------------------