இந்திய கணவர்களுக்கு உபயோகமான முக்கிய தீர்ப்பு !
========================================
கடைசியாக நம் குழுவில், பாம்பேயில் இரண்டு நீதிமன்றங்களில் மனைவி, ஜீவனாம்சம் கேட்டு, கணவருக்கு எதிராக, இரண்டு வழக்குகளிலும் ஜீவனாம்ச பணம் கட்ட சொல்லி உத்தரவு வந்தது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.
தற்போது, இந்திய கணவர்களுக்கு சாதகமாக உத்தரவு ஒன்று வந்துள்ளது.
மனைவி, கணவருக்கு எதிராக, குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 125 படியும், Hinud adoptions and maintenance act பிரிவு 18,20 படியும், பிரிவு 2௦,23, குடும்ப வன்முறை சட்ட படியும், ஹிந்து திருமண சட்ட பிரிவு 24 படி இடைக்கால ஜீவனாம்சமும் கேட்டு மனு செய்யலாம்.
தற்போது, இந்த சட்டங்களில் ஏதாவது ஒன்றில் மட்டுமே, மனைவி, கணவருக்கு எதிராக வழக்கு போட்டு, ஜீவனாம்ச தொகை கேட்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஒரு வேளை, இரண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்தாலும், கணவர், ஏற்கனவே ஜீவனாம்ச பணம் செலுத்தி வந்தால், அதை அடுத்த வழக்கில் உத்தரவு ஏதும் வந்தால், அதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்றும் சொல்லி உள்ளது.
நன்றி - lawyers directory india