குற்றவியல் வழக்குகளில் எதிரிகளை ஜாமீனில் விடும் போது ஒரு தொகையை பிணையத் தொகையாக வைப்பீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது சட்டப்படி சரியா?
இந்த விசயம் குறித்து பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஒரு தொகையை வைப்பீடு செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை விதிப்பது மிகவும் தவறானது என்றும் அவ்வாறு பணத்தை வைப்பீடு செய்ய வேண்டும் என்று கூறி ஜாமீன் கொடுப்பது அந்த நபருக்கு ஜாமீன் வழங்குவதை மறுப்பதற்கு ஒப்பான செயல் என்றும் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் " சீனிவாசலு ரெட்டி Vs தமிழ்நாடு அரசு (2002-10-SCC-653)" என்ற வழக்கில், ஒரு எதிரியை ஜாமீனில் விடுவிக்கும் போது அந்த எதிரி நீதிமன்றத்தில் முன்னிலையாவதை உறுதிப்படுத்தும் விதமாகவும், எதிரி தலைமறைவாகி விடுவதை தடுக்கும் விதமாகவும் மட்டுமே நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும், பணத்தை வைப்பீடு செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதிக்ககூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் " சந்திப்ஜோதி Vs டெல்லி மாநில அரசு (AIR-2000-SC-714)" என்ற வழக்கில், ஜாமீன் வழங்க பணத்தை வைப்பீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது நியாயமானதல்ல என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் " சேக் அயூப் Vs மத்திய பிரதேச அரசு (2004-13-SCC-457)" என்ற வழக்கில், எதிரியால் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் தொகை ரூ. 2,50,000/-த்தை வைப்பீடு செய்யும்படி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் " ஷியாம் சிங் Vs மாநில அரசு (2006-9-SCC-169)" என்ற வழக்கில் எதிரியை ஜாமீனில் விடுவிப்பதற்கு ரூ. 2,00,000/- த்தை வைப்பீடு செய்ய வேண்டும் என்று குற்றவியல் நடுவர் உத்தரவு பிறப்பித்தது சரியல்ல என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் " கெசாப் நாராயணன் Vs பீகார் மாநில அரசு (AIR-1985-SC-1666)" என்ற வழக்கில், பணத்தை பிணையத் தொகையாக வைப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிப்பது தவறான ஒன்று என தீர்ப்பு கூறியுள்ளது.
இதே கருத்துக்களை உச்சநீதிமன்றம் "உசைன் நாராகாத்தூன் Vs பீகார் மாநில அரசு (AIR-1979-SC-1360) மற்றும்" மகேஷ் சந்திரா Vs உத்திர பிரதேச அரசு (2006-6-SCC-196)" ஆகிய வழக்குகளிலும் வலியுறுத்தியுள்ளது.
எனவே குற்றவியல் வழக்குகளில் எதிரிகளை ஜாமீனில் விடும் போது ஒரு தொகையை பிணையத் தொகையாக வைப்பீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது சட்டப்படி தவறாகும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 19196/19197/2014
DATE - 5.2.2015
அமல்தாஸ் மற்றும் பலர் Vs ஆய்வாளர், பட்டீஸ்வரம் கா. நி, தஞ்சாவூர் மாவட்டம்
2015-1-MLJ-CRL-471
[1/26, 22:05] +91 98424 29261: காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அல்லது புகாருக்கான ரசீது கொடுப்பது என்கிற இரண்டு நடைமுறைகளைதாம் வைத்திருக்கிறார்கள் என்பது காவல் நிலையத்திற்குச் சென்றவர்கள் உட்பட, செல்லாத பலரும் கூட கேள்விப் பட்டிருப்பீர்கள் அல்லவா?
இதில் ரசீது கொடுத்து விசாரணை செய்வது என்பது முழுக்க முழுக்க குற்ற விசாரணை முறை விதிகளில் சொல்லப்படாத, அதாவது அச்சட்ட விதியை அமல்படுத்திய குடியரசுத் தலைவரால் அறிவுறுத்தப்படாத ஒரு கட்டப்பஞ்சாயத்து செயல்.
குற்ற விசாரணை முறை விதி 154 இன்படி, நீங்கள் கொடுக்கும் புகார் கைது செய்வதற்கு உரிய குற்றமாக இருக்கும் போது, உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவாளி தப்பிக்காதவாறு கைது, புலனாய்வு உட்பட அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுவே கைது செய்வதற்கு உரிய குற்றமாக இல்லாத போது, அதற்கு என மாநில அரசு உருவாக்கியுள்ள படிவத்தில் பதிவு செய்து கொண்டு (இப்படிவம் என்பது ஒருபோதும் முதல் தகவல் அறிக்கை கிடையாது) உங்களை அக்காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குச் சொல்ல வழிகாட்ட வேண்டும் என்றும், அப்புகாரின் மீது விசாரணை செய்யும் அல்லது விசாரணைக்கு அனுப்பும் நீதித்துறை நடுவரின் உத்தரவு இல்லாமல், காவல்துறை விசாரணை செய்யவே கூடாது என்று குற்ற விசாரணை முறை விதி 155 அறிவுறுத்துகிறது.
ஆனால் காவல்துறையிலோ, பெரும்பாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய புகார்களுக்கு ரசீது வழங்கி கட்டப்பஞ்சாயத்து செய்வதும், விசாரணை செய்ய அதிகாரம் இல்லாத புகாரை, தாங்களே உ(ய)ரிய சட்டப்பிரிவுகளுடன் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்வதையுமே அவர்களின் பற்பல வசதிக்காக வாடிக்கையாக வைத்திருக்க, மாக்களுக்கும் இந்த விபரங்கள் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.