Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

இந்தியாவில் 70 ஆண்டுகளாக வரி விதிப்புகளில், காலத்துக்கேற்ப பல்வேறு மாற்றங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக வரி விதிப்புகளில், காலத்துக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன.

முன்பு அதிகபட்சமாக 97 .5 சதவீதம் விதிக்கப்பட்டது. அப்போது 11 வருமான வரி பிரிவுகள் இருந்தன. இதுவரை வருமான வரி விதிப்பில் உள்ள மாற்றங்கள் ஒரு பார்வை.


 1949-50:

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அப்போதைய நிதியமைச்சர் ஜான் மத்தாய் வருமான வரியை குறைத்தார். அதாவது ஆண்டுக்கு 10,000 வரை வருவாய் ஈட்டுவோருக்கு ஒரு அணாவில் இருந்து முக்கால் அணாவாக வரி குறைக்கப்பட்டது. 


 1974-75:

97.75 சதவீதம் வரியா என்று மலைத்த காலத்தில், ஒய்.பி.சவான் அதிரடியாக இதனை 75 சதவீதமாக குறைத்தார். தனிநபர் வருவாயில் அனைத்து மட்டத்திலும் வரி குறைப்பு செய்யப்பட்டது. அதோடு, 6,000 வரை வருவாய் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. 70,000க்கு மேல் வருவாய்க்கான குறைந்தபட்ச வருமான வரி விகிதம் 70 சதவீதமாக இருந்தது. இதுேபால் உபரி கட்டணம் அனைத்து வருமான பிரிவுக்கும் ஒரே விகிதமாக 10 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது.



1985-86:

இந்த ஆண்டில் வி.பி.சிங் வரிவிதிப்பில் மாற்றங்களை கொண்டு வந்தார். இதன்படி வரி பிரிவுகள் 8ல் இருந்து நான்காக குறைக்கப்பட்டன. அதிகபட்ச வரி விதிப்பு 61.87 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுபோல் வருமான உச்சவரம்பாக ஆண்டுக்கு 18,000க்கு கீழ் ஆண்டுவருவாய் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 18,000 முதல் 25,000 வரை வருவாய் ஈட்படுபவர்கள் 25 சதவீதம், 25,001 முதல் 50,000 வருவாய் ஈட்டுபவர்கள் 30 சதவீதம், 50,001 முதல் 1 லட்சம் வரை 40 சதவீதம், 1 லட்சத்துக்கு மேல் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.


 1992-93:

வரி பிரிவுகள் எண்ணிக்கையை 3 ஆக குறைத்து மன்மோகன்சிங் அறிவித்தார். இதில் ஆண்டு வருவாய் 30,000 முதல் 50,000 வரை பெறுவோருக்கு 20 சதவீதம், 50,000க்கு மேல் 1 லட்சத்துக்குள் 30 சதவீதம், 1 லட்சத்துக்கு மேல் 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.



1994-95:

மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த பட்ஜெட்டில், வரி பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்தார். ஆனால் வரி விதிப்பில் மாற்றம் செய்யவில்லை. இதில் 35,000 முதல் 60,000 வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதம், 60,000க்கு மேல் 1.2 லட்சம் வரை 30 சதவீதம், 1.2 லட்சத்துக்கு மேல் 40 சதவீதம் விதிக்கப்பட்டது.


 1997-98:
 ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், அதற்கு முன்பு இருந்த 15, 30 மற்றும் 40 சதவீதம் என இருந்த வரி விதிப்புகளை 10, 20 மற்றும் 30 சதவீதம் என மாற்றினார். இதில் 40,000 60,000 வருவாய்க்கு 10 சதவீதம், 60,000 முதல் 1.5 லட்சம் வரை 20 சதவீதம், 1.5 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் எனவும் அறிவித்தார். இதில், பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதால் கனவு பட்ஜெட் என அழைக்கப்பட்டது.



2005-06:

ஏறக்குறைய 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் 1 லட்சம் வரை வரி விலக்கு, 1 லட்சத்துக்கு மேல் 1.5 லட்சம் வரை 10 சதவீதம் வரி, 1.5 லட்சத்துக்கு மேல் 2.5 லட்சம் வரை 20 சதவீதம், 2.5 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.


2010-11: பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 1.6 லட்சமாக உயர்த்தப்பட்டது. 1.6 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சதவீதம், 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதம், 8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் என அறிவிக்கப்பட்டது.


2012-13:
இந்த ஆண்டில் வருமான வரி உச்சவரம்பு 1.8 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சதவீதம், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 சதவீதம், 10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் விதிக்கப்பட்டது.


2014-15:
இதில் செல்வ வரி ஒழிக்கப்பட்டு, நிதி மசோதா 2015 அறிவிக்கப்பட்டது. செல்வ வரிக்கு பதிலாக, 1 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்ட பணக்காரர்களுக்கு உபரி வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.


2017-18:
2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது....