வரகு அதிரசம்
தேவையான பொருட்கள்
1. வரகு - 50 கிராம்
2. பச்சரிசி - 50 கிராம்
3. மண்டை வெள்ளம் - 75 கிராம்
4. ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
5. சுக்கு பொடி - 1/4 ஸ்பூன்
செய்முறை: வரகயும், பச்சரிசியையும் 6 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி நிழலில் காயவைக்கவும். லேசான ஈரத்தில் இருக்கும் போது இடித்து மாவக்கிகொள்ளவும். மண்டை வெல்லத்தை கம்பிபததிர்க்கு காய்ச்சி வடிகட்டி அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் சுக்குபொடி சேர்த்து பாகை மாவில் ஊற்றி நன்கு கிளறவும். கிளறியத்தை 24 மணி நேரம் ஊறவைக்கவும், பின்பு வட்டவடிவமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த அதிரசம் தயார்.
