1. கேழ்வரகு- 1/4 கிலோ
2. கொள்ளு -25 கிராம்
3. கோதுமை -25 கிராம்
4. சோளம் -25 கிராம்
5. சிவப்பு அரிசி - 25 கிராம்
6. கம்பு - 25 கிராம்
7.பொட்டுகடலை - 25 கிராம்
8. பார்லி -25 கிராம்
9.முந்திரி-10
10.பாதாம்-10
11. ஏலக்காய் -5
செய்முறை :
கேழ்வரகு , கொள்ளு ,கோதுமை ,கம்பு ,ஆகியவற்றை ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் முளை கட்டவும் . இரவில் முளை கட்டி வைத்தால் காலை முளை நன்கு முளைத்திருக்கும் .பொட்டுகடலை, சோளம் ,பாதாம், முந்திரி ,சிவப்பு அரிசி , பார்லி , ஏலக்காய் , அனைத்தையும் தனி தனியாக வருது கொள்ளவும் .முளை கட்டிய தானியத்தை நிழலில் உலர்த்தி அதையும் வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும் . தேவையான போது கஞ்சி காய்ச்சி குடிக்கவும் .
