குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை:
காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகளை நீதிமன்றம் காவல்துறையி னர் மூலம் அழைப்பாணை சார்வு செய்து விசாரிக்கும். சாட்சிகளுக்கு அழைப்பா ணை சார்வு செய்யப்பட்டிருக்கும் நிலை யில் அவர்கள் வரவில்லை என்றால் அவர்களுக்கு பிடிகட்டளை பிறப்பிக்கப் படும். குற்றவியல் வழக்கில் சாட்சிகளிட ம் முதல் விசாரணை(Chief Examination) முடிந்ததும் குறுக்கு விசாரணை செய்தல் வேண்டும். அவ்வாறு குறுக்கு விசாரணை செய்யப்படாததால் அடுத்தடுத்து சாட்சிகள் விசாரிக்கப்படுவ து நிறுத்தப்படமாட்டாது. குறுக்கு விசாரணை இல்லை என்று குறிப்பிடப் பட்டு அடுத்தடுத்த சாட்சிகள் விசாரிக்கப் படுவார்கள்.பிற்பட்ட காலத்தில் சாட்சிக ளை திரும்ப வரவழைத்து குற்றவாளியி ன் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்து கொள்ளலாம்.குற்றப் பத்தரிகை யில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்களை சாட்சிகள் அப்படியே கூறவேண்டும்.அப்படிக் கூறாமல் குற்றவாளி விடுதலையாகும் வகையில் சாட்சியமளித்தால் அவர் பிறழ் சாட்சியாக(Hostile Witness) என்று பதிவுச் செய்யப்படுவார். அவரை அரசுக் குற்றத்துறை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார். அரசு தரப்பில் சாட்சிகள் மூலம் குறியீடு செய்யப்படும் ஆவணங்கள், அ.த.சா.ஆ.என்று குறிப்பிடப்படும். குற்றவியல் வழக்குகளில் குற்றவாளி அவரது தரப்பில் சாட்சியமளிக்கலாம். குற்றவாளியின் தரப்பில் குற்றவாளி எத்தனைச் சாட்சிகளை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்.குற்றவாளியின் தரப்பில் குறியீடு செய்யப்படும் ஆவணம் எ.த.சா.ஆ.என்று குறிப்பிடப்படும்.