Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

நெல்லை - 60 லட்சம் ரூபாய் நில மோசடி! நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

நெல்லை - 60 லட்சம் ரூபாய்  நில மோசடி!
 நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு! 


திருநெல்வேலி:நெல்லை அருகே, 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக, அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலர் உட்பட, ஏழு பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே, பேரின்பபுரத்தைச் சேர்ந்தவர், கேபிரியேல் ராஜன், 60. நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

இவர், அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார், 45, என்பவரது நிலத்தை அபகரித்து, போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக, எஸ்.பி., அருண்சக்திகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

எனவே, ரவிக்குமார், நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், காபிரியேல்ராஜன் உள்ளிட்ட, ஏழு பேர் மீது, 420 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 12.11.2018