Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

உரிமையியல் வழக்கில், ஜெராக்ஸ் காப்பியை, சான்று ஆவணமாக குறியீடு செய்ய முடியுமா?

உரிமையியல் வழக்கில், ஜெராக்ஸ் காப்பியை, சான்று ஆவணமாக குறியீடு செய்ய முடியுமா?



நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அசல் ஆவணங்களின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும், புகைப்பட நகல்கள் பொதுவாக அசல் ஆவணங்களோடு ஒத்துப் போவதில்லை என்றும் கீழ்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.


சிறப்பு வட்டாட்சியர், பொன்னேரி வட்டம் 
Vs 
K. லீலம்மாள் மற்றும் பலர்
(2000-1-LW-402)


தமிழ்நாடு இண்டீஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் 
Vs 
N. சுவாமிநாதன் மற்றும் பலர்(2002-4-MLJ-147)


மீனாட்சியம்மாள் மற்றும் பலர் 
Vs 
கோபால கிருஷ்ணன் மற்றும் பலர்
(2004-3-CTC-481)


பொன்னம்பலம் Vs பிச்சை
(2008-2-LW-809)


அதேபோல் உச்சநீதிமன்றம்

 " ஷாலிகுமார் கெமிக்கல்ஸ் குவார்ட்ஸ் லிமிடெட் 

Vs 
சுரேந்திரா ஆயில் அண்ட் டால் மிக்ஸ்" என்ற வழக்கில்
பதிவுச் சான்றிதழின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு பிரதிவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் அந்தப் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.



எனவே ஓர் உரிமையியல் வழக்கில் ஓர் ஆவணத்தின் ஜெராக்ஸ் காப்பியை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு மறுதரப்பினர் எந்தவிதமான ஆட்சேபனையையும் முன்வைக்கவில்லை என்றாலும்கூட அந்த ஜெராக்ஸ் காப்பியை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.


CRP. NO - 1963/2013
DT - 1.6.2017
அவனி Vs சோமசுந்தரம் மற்றும் பலர்
2017-3-TNCJ-241