பெற்றறோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு
சட்டம்,2007
பிள்ளைகளால் பராமரிப்பு செய்யப்படாத பெற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் பராமரிப்பு தொகைகளை பிள்ளைகளிடம் இருந்து பெற்று தரவும் மாவட்டம் தோறும் குறைதீர் தீர்பாயங்கள் ஏற்படுத்தி செயல்படவேண்டும் என இச்சட்டம் சொல்கிறது .
தீர்ப்பாயம் 90 நாட்களுக்குள் பராமரிப்பு வேண்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்து உத்தரவு வழங்க வேண்டும்.
ஏற்கனவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 பிள்ளைகளால் பராமரிப்பு இன்றி தவிக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பராமரிப்பு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம் என்று உள்ளது.
ஒரு தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவால் பாதிப்புக்குள்ளான ஒரு
மூத்த குடிமகன் அல்லது பெற்றோர் அறுபது நாட்களுக்குள்
தங்கள் குறைகளை உயர்மட்ட தீர்ப்பாயத்திடம் மேல் முறையீடு
செய்யலாம்.
மாநில அரசு தேவையான அளவிற்கு, தேவைபடும் இடங்களில்
முதியோர் இல்லங்களைஅமைக்கலாம்
அரசு மருத்துவமலனகளிலும் அல்லது அரசால் முழு அல்லது
பகுதி நிதிஉதவி வழங்கப்படும் மருத்துவமலனகளில்
முதியோர்களுக்கென்று தனி படுக்கைகள் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்ததலிருி்நது, ஒருமுதிதயார் தனது
சொத்தை ஒருவருக்கு தானமாகவோ அல்லது வேறு வழியிலோ
மாறுதல் செய்த பிறகு, சொத்தை பெற்றுக்கொண்டவர்
பின்னாளில் அந்த முதியோருக்கு தேவையான வசதிகள் மற்றும் பரிமரிப்பு செய்ய மறுத்தாலோ, தவறினாலோ இந்த சட்டப்படி அந்த சொத்து பரிமாற்றம் தீய நோக்கத்தோடு, தவறான முறையில் , மிரட்டி வாங்கப்பட்டதாக கருதப்படும்.
இந்த சட்டம் தமிழகத்தில் இன்னும் முறையாக அமல்படத்தப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.முறையாக அமல்படுத்தக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகி நிலுவையில் உள்ளது.
Website : www.lawyerchennai.com