கள்ளு மதுபானமா? உச்சநீதிமன்றம் கேள்வி...
அனைத்து மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் அருகே இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல கேரளாவிலும் மதுக்கடைகள் அகற்றப்பட்டது. ஆனால் கள்ளு கடைகளை அகற்றுவதற்கு கள்ளுக்கடை உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
மற்ற மதுபோல கள்ளு போதை பானம் அல்ல. எனவே கள்ளுக்கடைகளை அகற்ற முடியாது என்று அவர்கள் கூறினார்கள். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அவர்கள் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு வந்தது.
அப்போது கேரள அரசு சார்பில் வாதாடிய வக்கீல் கிரி, கள்ளுவில் குறைந்த அளவிலேயே போதை தன்மை இருக்கிறது எனவே மற்ற மதுபானத்தோடு அதை ஒப்பிடக்கூடாது. கேரள மாநிலம் மக்கள் நெருக்கடி அதிகம் கொண்ட பகுதியாகும். அங்கிருக்கும் கள்ளுக்கடைகளை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து வெகுதூரத்துக்கு மாற்றுவது முடியாத காரியம் என்று கூறினார்.
அதேபோல கள்ளுக்கடை அதிபர்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் பீனாமாதவன், ராமச்சந்திரன் ஆகியோர் வாதாடினார்கள். அவர்கள் கூறும்போது, கள்ளு ஆபத்தான மதுபானம் அல்ல. இதை குடிப்பவர்கள் கட்டுப்பாட்டை இழப்பது இல்லை. எனவே கள்ளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
கள்ளுவில் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதை மக்கள் பாரம்பரிய உணவாக அருந்தி வருகிறார்கள். இதை குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் டிரைவர்கள் அதனால் பாதிக்கப்படுவது இல்லை.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 520 கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. எனவே அதை நடத்தியவர்கள் தொழிலை இழந்துள்ளனர். எனவே சாலையோரம் உள்ள கடைகளை அகற்றுவதற்கு உத்தரவிடக்கூடாது என்று கூறினார்கள்.
இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா கள்ளு மதுபானம் இல்லை என்பதை கேரள அரசு நிரூபித்து அறிக்கை தரவேண்டும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார்.