Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

10 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மார்ச் 28 ம் தேதி தேர்தல் 

10 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற  விதியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளிவைத்தது  சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மார்ச் 28 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக பார் கவுன்சிலின் சிறப்பு நிர்வாகக் குழு புது விதிகளை அறிவித்துள்ளது.
தொடர்ந்து 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், அரசியல் கட்சிகளில் பதவியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான வழக்கறிஞர்கள் போட்டியிட முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பார் கவுன்சில் சிறப்பு குழு உறுப்பினர்  மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன்


இந்த விதிமுறைகளை எதிர்த்து, வழக்கறிஞர்கள் செல்வகுமார், முருகேந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள்  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது பார் கவுன்சில் சிறப்பு குழு உறுப்பினர்  மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலை இருக்கும்.  தமிழகத்தின் சூழ்நிலை கருத்தில் கொண்டு இந்த விதிகள் வகுகக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விதிகளை வகுக்க சிறப்பு குழுவிற்கு சட்டப்படி அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகேந்திரன், 10 ஆண்டுகள்  வழக்கறிஞர்களாக இருந்தால் மட்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி இந்தியாவில் வேறெங்கும்இல்லை என்றும், தமிழத்தில் மட்டும் இதை நடைமுறைப்படுத்துவது பாரபட்சமானது என்று தெரிவித்தார். மேலும்  தமிழக இளம் வழக்கறிஞர் மற்ற மாநில பார் கவுன்சில் தேர்தலில், போட்டியிட முடியும் ஆனால் தமிழத்தில் போட்டியிட முடியாது என்ற அவலநிலை நிலவுவதாகவும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு , வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளிவைத்தது