வாழ்க்கையில் பட்ட அவமானங்களில் இருந்து பாடம் கற்று, பட்ட அவமானங்களை படிப்பினையாக ஏற்றுக்கொண்டு, அவமானங்களையே தங்களது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி, உயர்ந்தவர்கள்தான் உண்மையான சாதனையாளர்கள்.
பெற்றோர்களே!!! உங்கள் குழந்தைகளை கண்டிப்புடன் வளருங்கள். தவறு செய்யும் போது திட்டுங்கள். தேவைப்பட்டால் அடியுங்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் செய்த தவற்றை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதன் விளைவுகளையும் பாதிப்புகளையும் புறிய வையுங்கள்.
அவர்களிடம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து, அவர்களை நல்வழி படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.
அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஒழுங்காக, தேவையான இடத்தில், தனிமையில் கண்டித்து, அடுத்தவர்கள் முன் அவர்களை மரியாதையுடன் நடத்தி வர வேண்டும். அவர்கள் போட்டி போட, முதலிடம் பிடிக்க குதிரைகள் அல்ல, ஆறறிவு உள்ள மனித குழந்தைகள் என்பதை நாமும் உணர்ந்து, அவர்களிடம் உள்ள திறமைகளை அவர்கள் வெளி கொண்டு வர உதவி, அவர்களுடைய பலவீனத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதை எல்லாம் கற்று தருவது பெற்றோர்களின் கடமை.
--
Regards
Saravvanan R
Advocate & Legal Consultant
+91-9994287060
Rajendra law office
A7, Ben orchid westend Phase II,
TS Krishna nagar,
Mogappair East,
Chennai - 600037
email : chennailegalfirm@gmail.com
Website : www.lawyerchennai.com