Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

முதலில் மாற வேண்டியது அரசியல்வாதி அல்ல.. "நாம்தான்"

🙊🙉🙈
200 ரூபாய் பணத்திற்கும்
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
 வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில்   உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?

🙊🙉🙈அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக 
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?

🙊🙉🙈
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதனையெல்லாம் மறந்துவிட்டு 
மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?

🙊🙉🙈
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?

🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...
"நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்" என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி உருவாகும்?

🙊🙉🙈
நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் வாழ்க கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?

🙊🙉🙈
கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்? எது சரியான பாதை? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?

🙊🙉🙈
தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் புதிய அரசு எப்படி சாத்தியம்?

🙊🙉🙈 
எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்
நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை...

People deserves the Government..... 
மக்களின் தரத்திற்குத் தக்கபடிதான் அரசு அமையும்..           

 *முதலில் மாற வேண்டியது அரசியல்வாதி அல்ல.. "நாம்தான்"....* 


-படித்ததில் இருந்து
--
Regards

Saravvanan R
Advocate & Legal Consultant

+91-9994287060

Rajendra law office
A7, Ben orchid westend Phase II,
TS Krishna nagar,
Mogappair East,
Chennai - 600037