2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் PIO Card என்ற முறை ரத்து செய்யப்பட்டு OCI ஆக மாற்றப்பட்டு விட்டது. எனவே இனி PIO Card முறை இல்லாததால் OCI - ஐ பற்றி மட்டும் கூறுகிறேன். அதற்கு முன்பு இரட்டைக் குடியுரிமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக ஒரு நாட்டில் பிறந்த எந்த ஒரு குடிமகனுக்கும் அந்த நாட்டின் குடியுரிமை உண்டு. அவருக்கு அந்த நாட்டு அரசியலமைப்பு சட்டம் மற்றும் குடியுரிமைச் சட்டங்களில் கூறப்பட்டுள்ள உரிமைகளும், கடமைகளும் உண்டு. பொதுவாக, ஒரு நாட்டு குடியுரிமை உள்ளவர், இன்னொரு நாட்டுக் குடிமகனாக மாறினால், அவர் சொந்த நாட்டின் குடியுரிமையை அவர் இழக்க நேரிடும். அதற்கு மாறாக அவர் பிறந்த ( சொந்த) நாடு மற்றும் அவர் சென்றுள்ள நாடு இரண்டிலும் குடியுரிமை பெறுவதே இரட்டைக் குடியுரிமை எனப்படும். அவ்வாறு இரட்டைக் குடியுரிமை கொடுக்கப்படும் முறை அந்த இரண்டு நாடுகளிலும் நடைமுறையில் இருந்தால் தான் அந்த இரட்டைக் குடியுரிமையை அவர் பெற முடியும்.
ஏற்கனவே கூறியுள்ளபடி சுமார் 22 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அவர்களில் பலர் வசிக்கும் நாட்டின் குடியுரிமையை பெற்றுவிட்டதால் இந்திய குடியுரிமையை இழந்து விடுகிறார்கள். அவர்களில் பலர் குறிப்பாக வட அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் இந்திய குடியுரிமையும் வேண்டும் என்று தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வந்தனர். அதாவது இரட்டைக் குடியுரிமை கேட்டனர். இதனை கருத்தில் கொண்ட இந்திய அரசு (அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் சிறிய மாற்றங்களுடன்) ஆகஸ்ட் மாதம், 2005 ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-ஐ திருத்தம் செய்து Overseas Citizenship of India (OCI) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் படி 26.01.1950 அன்றோ அதற்கு பிறகோ இந்திய குடியுரிமை பெற்றிருந்த இந்திய வம்சாவளியினர் (OCI) Overseas Citizen of India எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களாக பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் பாக்கிஸ்தான், பங்காளதேஷ் மற்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்க கூடாது.
OCI எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என்று தவறாக கருதப்படக் கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 16 ல் கூறப்பட்டுள்ள இந்திய குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு என்ற உரிமை இவர்களுக்கு கிடையாது.
அப்படியானால் நம் நாட்டில் இரட்டைக் குடியுரிமை உண்டா? என்று கேட்டால் உண்டு... ஆனால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் சொத்து வாங்கும்போது மேற்படி நடவடிக்கைகள் "அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999" பிரிவு 6(3)(1) மற்றும் மேற்படி சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் விதிகளின்படி கட்டுபடுத்தப்படுகிறது.
வெளிநாட்டை சேர்ந்த நபர் எந்தெந்த சொத்துக்களை வாங்கலாம் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி Notification No. FEMA 21/2000 - 6B Dated 3.5.2000 ன்படியும் தொடர்ந்து வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி வரையறுத்துள்ளது. மேற்படி விதிமுறைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டை சேர்ந்த NRI அல்லது PIO ஒருவர் விவசாய நிலங்களையோ அல்லது Farm House எனப்படும் பண்ணை வீடுகளையோ கிரையம் வாங்குவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வீடு அல்லது Commercial Property ஆகியவற்றை மட்டுமே கிரையம் வாங்கிக் கொள்ளலாம். அதேசமயம் வெளிநாட்டை சேர்ந்த PIO அல்லாத நபர் எந்த ஒரு சொத்துக்களையும், வீடு, Commercial property உட்பட எதனையும் கிரையம் பெறுவது முடியாது. 5 வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தம் மட்டுமே பிறப்பிக்க இயலும்.
இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன?

இரட்டைக் குடியுரிமைக்குக் கோரிக்கை :

வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் சொத்து வாங்க சட்டத்தில் வழி உள்ளதா?