Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

காங்கிரஸ் கட்சியால் ஜல்லிக்கட்டு

*சில கேள்விகள் சில பேர்க்கு:*

*1. மோடிக்கு -*

*காங்கிரஸ் கட்சியால் ஜல்லிக்கட்டு ஐ தடை செய்ய முடியும் என்றால் , உங்களால் தடையை நீக்க முடியாதா? இல்லை எங்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பரிசா?*

*2. உச்ச நீதிமன்றத்துக்கு -*

*சென்ற வருடம் ரெண்டே நாளில் தீர்ப்பு சொல்ல முடிந்த உங்களுக்கு , இந்த வருடம் தீர்ப்பு சொல்ல நாள் பத்தலையா? இல்லை பீட்டா கொடுத்த காசுக்கு விசுவாசமா?*

*3. பீட்டாக்கு -*

 *வருடத்தில் ஒரு நாள் மாடுகளை கும்பிட்டு நடத்தும் ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரும் நீங்கள், வருடம் முழுதும் நடக்கும் பீப் ஏற்றுமதியை கண்டு கொள்ளாதது, நாட்டு காளைகளை அழிக்கும் நோக்கிலா? இல்லை  நீங்கள் தோல் பொருள்கள் பயன் படுத்துவதாலா?*

*4. தமிழக அரசுக்கு -*

 *ஜல்லிகட்டு நடக்கும் என்று சொன்ன நீங்கள், ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது, ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்ற பயத்திலா?  இல்லை சின்னம்மா துதி பாடவே நேரம் பத்தலையா?*

*5. இறுதியாக யாரிடம் கேட்பதன்றே தெரியாத கேள்வி -* 

*ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அல்லது பெரும்பாலான மக்கள், தங்கள் பாரம்பரிய உரிமையை கேட்டு போராடும் போது  அதை ஒரு வெளி நாட்டு அமைப்புக்காக மறுக்கும் அரசின் பெயர் ஜனநாயக அரசா?*

*இப்படிக்கு,*

*✍இந்திய தமிழ்மகன்*