Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

TMC என்பது தண்ணீரின் அளவையலகு என்பது தெரிகிறது. தண்ணீர் எவ்விதம் அளக்கப்படுகிறது?. legalfirm.in

*TMC என்பது தண்ணீரின் அளவையலகு என்பது தெரிகிறது. தண்ணீர் எவ்விதம் அளக்கப்படுகிறது?*
உதாரணமாக கர்நாடகா 10 TMC தண்ணீர் திறந்துவிட்டது என்பதை எப்படிச் சோதித்தறிவது?
TMC என்பது Thousand Million Cubic feet என்பதன் சுருக்கம். இது ஒரு நீர்மத்தின் பெரும் கொள்ளளவை அலகு ஆகும்.
1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட பாத்திரத்தில் ஏறத்தாழ 28.3168 லிட்டர் அளவிலான நீர் கொள்ளும். அப்படி என்றால், 1 TMC என்பது,
28.3168 x 1,000,000,000 = 28,316,800,000 லிட்டர் (ஏறத்தாழ இருபத்தெட்டு பில்லியன் லிட்டர்)
திறந்து விடப்படும் வழித்துளையின் விட்டம், நீர்மட்டம் (அல்லது அழுத்தம்) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மணிக்கு இத்தனை அளவு நீர் வெளியேறும் என்று கணக்கிடப்படும். அதனடிப்படையில், இத்தனை நேரம் திறந்து வைத்திருந்தால் 10 TMC தண்ணீர் வெளியேறும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
www.legalfirm.in