Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

பொது மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு முதலில் குரல் கொடுப்பவர்கள் வழக்கறிஞர்கள்தான்.

வழக்கறிஞர் போராட காரணம் என்ன என்பதை பொது மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

பொது மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு முதலில் குரல் கொடுப்பவர்கள் வழக்கறிஞர்கள்தான்..
எனக்கு தெரிந்து டாக்டர்கள்.. அரசு ஊழியர்கள்.., மற்றும் பலதுறையை சேர்ந்தவர்கள் அவர்களது தேவைக்கு மட்டும்தான் குரல் கொடுப்பார்கள்.. ஆனால் நாங்கள் மேலே உள்ள அத்தனை பேருக்காகவும் குரல் கொடுப்பவர்கள்..

வழக்கறிஞர்கள் திருத்த சட்டம் ஏன் வேண்டாம் என்கிறோம் என்பதை பொதுமக்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்..

1. ஒரு நீதிபதி இலஞ்சம் வாங்கிவிட்டார் என்று நாங்கள் புகார் செய்தால் அவற்றை நாங்கள் நிருபித்தாக வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு வீதிக்கு அனுப்பப்படுவோம்.

2. நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியோ அல்லது ஊழியர்களோ   அவர்களது பணியை சரியாக செய்யவில்லை என்று புகார் கொடுத்து அதை நிருபிக்கவில்லை என்றாலும் எங்கள் நிலைமை அதோகதிதான்.

3. உங்களுக்கான வழக்கில் வாதங்களை நாங்கள் எடுத்துரைக்கும் பொழுது கையை உயர்த்தியோ... குரலை   எழுப்பியோ பேசக்கூடாது...

4. ஒரு நபருக்கு எங்களை பிடிக்கவில்லை என்றால் அவர் நாங்கள் நீதிபதி பெயரை சொல்லி பணம் கேட்டார் என்று புகார் கொடுத்தால் எங்கள் தொழில் காலி..

5. சம்பளம் வாங்கும் அரசு பணியாளர்கள் அவர்களது குறைக்காக பணி செய்யும் இடத்தில் உண்ணாவிரதம், ஆர்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றின் மூலம் வெளிபடுத்தலாம்.. ஆனால் அரசிடமிருந்து எந்த சம்பளம் வாங்காத நாங்கள் அவ்வாறு செய்தால் எங்கள் தொழில் காலி.

6. ஒரு தனி நபர் செய்யும் குற்றத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைக்கு எதிராக அவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் வரைக்கும் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் எந்த மேல்முறையீடும் இல்லை நேரா வீடு அல்லது சுடுகாடு..

7. முறையற்ற வழக்கறிஞர்கள் செய்யும் சில தவறுகளான சட்டத்திற்கு முரணான நடப்பது, நீதிமன்றங்களுக்குள் போதை பொருள்கள் பயன்படுத்துவது, ஒழுங்கீனமாக நடப்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு  தற்போதுள்ள சட்டப்படி பார் கவுன்சில் உரிய விசாரணைக்கு பின்னிட்டு நடவடிக்கை எடுத்து பல வழக்கறிஞர்களை தண்டித்துள்ளது.. ஆனால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் விசாரணைக்கு வேலையில்லை.. நேரடியாக மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிம்னறமும் எங்களை வீட்டுக்கு அனுப்பலாம்..

இந்த சட்டம் ஒரு வேளை நடைமுறைபடுத்தப்பட்டால்

1. உங்களுக்காக எங்களால் உரிமையாக பேசமுடியாது..

2. இப்போது காவல் நிலையங்களில் நடத்தப்படும் பஞ்சாயத்துகள்.. நீதிமன்றங்களும் நடத்தும்.

3. நீங்கள் நீதிமன்றங்களால் நேரடியாக மிரட்டப்படலாம்.

4.தீர்ப்புகள் திணிக்கப்படலாம்.

5. முறையற்ற நீதிபதிகள் ஊழலே தங்கள் வாழ்க்கை என முறைபடுத்தி கொள்ளலாம்.

6.தீர்ப்புகள் தவறாக இருந்தாலும்... அதுவே வேதவாக்காக பார்க்கப்படலாம்.

7. சில காலங்களில் மேல்முறையீட்டு வாய்ப்புகள் பறிக்கப்படலாம்..

8. 2001- ம் ஆண்டுகளில் திரும்ப பெறப்பட்ட உரிமையியல் விசாரணை சட்ட திருத்தம் மீண்டும் அமல் படுத்தப்படலாம்.

9. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வழக்குகளுக்கும் நாம் கட்டணம் செலுத்துவது போல் தீர்ப்புகளுக்கும் விலை நிர்ணயிக்கப்படலாம்..

      உங்களுக்கானவர்கள் நாங்கள்..... மக்களுக்காக போராடும் ஒரே ஜீவன்கள் வழக்கறிஞர்கள்தான்.. எங்களை புரிந்து கொள்ளுங்கள்.. ஒத்துழைப்பு கொடுங்கள்...

நீதியே... நியாயம்... நியாயமே தர்மம்....