சென்னை வியாசர்பாடியில், ஐகோர்ட் வழக்கறிஞராக பணிபுரியம் ரவி என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அவர் பல்வேறு வழக்குகளில் திருநங்கைகளுக்கு ஆதரவாக ஆஜராகி வந்துள்ளார். எம்.கே.பி. நகர் பாலம் அருகே திருநங்கைகளுடன் பேசிக்கொண்டிருந்த போது, அவர் வெட்டிக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
