Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

வழக்கறிஞர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால்

வழக்கறிஞர்கள்  ஹெல்மெட் அணியவில்லை என்றால் பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு அவர்களை சஸ்பென்ட் செய்ய வேண்டுமென நீதியரசர் சொல்லியிருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு வழக்கறிஞர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சென்றால் அது விதி மீறல். அந்த விதி மீறலுக்கான தண்டனை என்ன என சட்டம் சொல்லுகிறது. அந்த தண்டனை தர போக்குவரத்து காவல் அதிகாரிகள் இருக்கின்றனர். இந்த தண்டனையில் பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு எப்படி தலையிடும் என்று தெரியவில்லை.

பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு Professional Misconduct செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பதற்கான ஒரு அமைப்பு . ஒரு வழக்கறிஞர் ஹெல்மெட் போடாமல் போனால் அது Professional Misconductஆ? இது குறித்து Advocates Actல் எந்த ஷரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது? விதி மீறல் எப்படி Professional Misconduct ஆகும்?

விதி மீறல் எல்லாம் Professional Misconduct டானால் சாலையில் எச்சில் துப்பும் வழக்கறிஞரையும், வடை கட்டி வந்த தாளை சாலையில் வீசும் வழக்கறிஞரையும் சஸ்பென்ட் செய்ய முடியும். அவ்வாறெல்லாம் நடந்தால் வழக்கறிஞர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகத்  தான் வாழ்நாள் முழுவதும் போராட முடியுமே தவிர கட்சிக்காரனை காப்பாற்றப் போராட முடியாது.

தவிர ஹெல்மெட் போடாமல் வாகனங்களில் செல்லும் வழக்கறிஞர் மீது போக்குவரத்து காவலர்களும், பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடும் நடவடிக்கை எடுத்தால் அது Double Jeopardy ஆகாதா?  சராசரி மனிதர்களுக்கு உணர்ச்சி அறிவை மிஞ்சலாம். ஆனால் நீதியரசர்களுக்கும் அப்படியே இருக்கலாமா?

சட்டம் என்பது இரும்பு சங்கிலி போன்றது. அந்த இரும்பு சங்கிலியின் வலிமை நீதியரசர்களின் கண்களுக்கு தெரிந்தால் அந்த வலிமையான சங்கிலியில் இருக்கும் வளமான ஒட்டை வழக்கறிஞர்களின் கண்களுக்கு தெரிகிறது. அந்த ஊசி முனை ஒட்டை வழியே பெரிய ஊர்வலத்தையே நடத்தும் திறமை வழக்கறிஞர்களுக்கு இருக்கிறது. பிறகு எதற்கு விஷப் பரிட்சை?

எனவே ஹெல்மெட் விஷயத்தில் வழக்கறிஞர்களின் மாண்பை குறைத்து மதிப்பிடக் கூடாது என நீதியரசர் பானுமதி ஜே சொன்னது பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய சத்திய வார்த்தைகள். 


வழக்கறிஞர்களும் சட்டத்தை மதித்து ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டி வருகின்ற வேளையில் நீதியரசர்களின் இரு வேறுபட்ட இது போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் மீது மட்டுமல்ல; நீதித்துறை மீதான மதிப்பையே குறைத்து விடும்.

Advocates are not Law Breakers! But ever they are Law Protectors!!