Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

​இறந்து போன ஒரு தொழிலாளியின் இழப்பீட்டுத் தொகையை பெற சட்டப்படி யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?


Insurance : இறந்து போன ஒரு தொழிலாளியின் இழப்பீட்டுத் தொகையை பெற சட்டப்படி யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?

தொழிற்சாலைகளில் தற்போது பல்வேறு வகையான புதுப்புது இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல ஆபத்துகளை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த அவல நிலையிலிருந்து அவர்களை பாதுகாக்க தொழிலாளர்கள் இழப்பீடுச் சட்டம், 1923 இயற்றப்பட்டது. 

இங்கிலாந்து நாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த சட்டம் நம் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த நாட்டில் உள்ளதுபோல அனைத்து தொழில்களிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களும் இழப்பீடு பெற முடியாது. மாறாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும். 

(குறிப்பு :- தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம் 1948, நாட்டில் அமுலாக்கத்திற்கு வந்த பின்பு அந்த சட்டத்தின் அமுலாக்கத்திற்கு உட்பட்டு இழப்பீடு பெற உரிமை உள்ளவர்கள் எவரும் தொழில் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியாது என்பது கவனிக்கப்படதக்கதாகும். ஊதிய வரம்பின்றி அனைத்து தொழிலாளர்களும் இந்த சட்டத்தின்படி இழப்பீடு பெறலாம்) 

தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் இறந்து போன தொழிலாளிக்காக இழப்பீடு கோரும் நபர் இந்த சட்டத்தின்படி "சார்ந்திருப்பவராக" இருத்தல் வேண்டும். 'சாரந்திருப்பவர்' என்பது தொழிலாளியின் வாரிசுகள் அல்லது உறவினர்கள் எல்லாரையும் குறிக்காது. உறவுமுறை மட்டுமில்லாமல் ஓரளவாவது இறந்து போன தொழிலாளியின் வருமானத்தை நம்பியிருப்பதே சாலந்திருத்தலாக கருதப்படுகிறது. அவ்வாறான நபர்களே இழப்பீடு கோரி முதலாளியிடம் மனு செய்து கொள்ள தகுதியான நபர்கள் ஆவார்கள். 

இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d) தொழிலாளியின் உறவினர்களை 3 வகையாக பிரித்துள்ளது. 

1. முதல் வகையில் வருகிற 'சார்ந்திருப்பவர்கள்' என கருதப்படும் உறவினர்கள் யார் என்றால் - 

விதவை, 

உரிய வயதடையாத முறைப்படி பிறந்த மகன் அல்லது தத்தெடுக்கப்பட்ட மகன் (a minor legitimate or adopted son), 

முறைப்படி பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட திருமணமாகாத மகள் 

விதவை தாய் (widowed mother) 

இந்த முதல் வகையில் வருகிற 4 உறவினர்களும் தங்களது வாழ்க்கைக்கு இறந்து போன தொழிலாளியின் சம்பாத்தியத்தை நம்பியிருந்தால் சரி, நம்பியிராவிட்டாலும் சரி அவர்கள் 'சார்ந்திருப்பவர்களாகவே' கருதப்படுவார்கள். 

2. இரண்டாம் வகையில் கீழ்க்கண்ட உறவினர்கள் சார்ந்திருப்பவர்களாக கருதப்படுகிறார்கள் 

தொழிலாளி விபத்தில் இறந்த சமயத்தில் அந்த தொழிலாளியின் வருமானத்தை தனது வாழ்விற்கு முழுமையாக நம்பியிருந்த 18 வயது நிரம்பியுள்ளதாகவும் மனவளர்ச்சி குன்றியதாகவும் (infirm) உள்ள மகன் அல்லது மகள் (தத்தெடுக்க மகன், மகள் உட்பட) 

இந்த வகை வருகிறவர்கள் 'சாரந்திருப்பவர்' என கூறப்படுவதற்கு மனவளர்ச்சி குன்றிய யவர்களாக (infirm) இருப்பதோடு தொழிலாளியின் வருமானத்தை முழுமையாக (wholly dependant) நம்பியிருப்பதை நிரூபித்தல் அவசியமாகும். 

3. மூன்றாம் வகையில் வருகின்ற கீழ்க்கண்ட உறவினர்கள் 'சாரந்திருப்பவர்' என கூறப்படுவதற்கு அவர்கள் இறந்து போன தொழிலாளியின் வருமானத்தை அவர் இறக்கும் சமயத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நம்பியிருத்தல் அவசியமாகும். அத்தகைய உறவினர்கள் யாரென்றால்

மனைவியை இழந்தவர் (a widower) 

பெற்றோர் (இதில் விதவை தாய் அடங்காது) (a parent other than a widowed mother) 

முறையில்லா மணப்பிறப்பின் மூலம் பிறந்து (illegitimate minor son) உரிமை வயதை அடைந்திராத மகன் மற்றும் முறையில்லா மணப்பிறப்பின் மூலம் பிறந்த திருமணமாகாத மகள் அல்லது முறைப்படியான மணப்பிறப்பின் மூலமாக பிறந்த அல்லது அவ்வாறு இல்லாமல் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட ஒரு மகளானவள் திருமணமாகியும் உரிய வயதை அடையாமல் இருந்தால் அவர் அல்லது விதவையாக இருக்கிறதோடு உரிய வயதடையாத அத்தகைய மகள்

உரிய வயதடையாத சகோதரன் அல்லது தொழிற்தீர்ப்பாயம் சகோதரி (Minor brother or unmarried sister) அல்லது உரிய வயதடையாத விதவையாயிருக்கும் சகோதரி 

விதவை மருமகள் 

தனக்கு முன்பாகவே இறந்து போன மகனின் உரிய வயதடையாத மகன் 

தனக்கு முன்பாகவே இறந்துவிட்ட மகளின்/தத்தெடுக்கப்பட்ட மகளின் உரிய வயதடையாத பிள்ளை ( எனினும் அந்த பிள்ளைக்கு பெற்றோர் யாரும் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்) 

தொழிலாளியின் பெற்றோர் உயிரோடு இல்லாதபட்சம் அவரின் தந்தை வழியிலான தாத்தா மற்றும் பாட்டி 

மேலே சொல்லப்பட்ட 3 வகைகளிலும் வருகின்ற உறவினர்கள் மட்டுமே 'சாரந்திருப்பவர்' என்ற தகுதியை பெற முடியும். மேலும் அவர்கள் தங்களது சாரந்திருத்தலை நிரூபிக்க வேண்டும். அதனடிப்படையில் தான் இழப்பீடு கோரவும், வழக்கு தாக்கல் செய்யவும் முடியும். 

அத்தகைய அனைவருக்கும் சமமான அளவில் இழப்பீடு கிடைக்கும்.

Saravvanan R
Advocate & Legal Consultant

+91-9994287060

Rajendra law office
8/13, Bharathi Salai
,
Near West Mogappair Bus terminus,
Mogappair 
We
st,
Chennai - 600037