Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

படைக்கலச் சட்டம் 1959 பிரிவு 3(1)

படைக்கலச் சட்டம் 1959 பிரிவு 3(1) ன் படியும் மற்றும் 1962-ம் ஆண்டின் படைக்கல விதிகளின் படியும், படைக்கல உரிமம் இன்றி எந்தவொரு நபரும் படைக்கலத்தை வைத்திருத்தல் கூடாது.

மேற்கண்ட சட்டப்பிரிவு 3(2)-ன் படி, ஒரு நபர் மூன்று படைக்கலங்களுக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது ஆனால் விதி எண் 3(2)-ன் படி ரைபிள் கிளப்பில் ஆயுள் உறுப்பினராக இருக்கும் நபர் மூன்று படைக்கலங்கள் தவிர்த்து ஒரு 22 ரைபிள் வைத்துக் கொள்ளலாம்.

தற்காப்பு, பயிர் பாதுகாப்பு, கால் நடைபாதுகாப்பு விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற தகுதியான காரணங்களுக்காக மட்டுமே படைக்கல உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

தடை செய்யப்படாத துப்பாக்கிகள், ரைபிள், ரிவால்வர், பிஸ்டல் போன்ற படைக்கலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்கும் அலுவலர்களாக இருப்பார்கள்.

படைக்கல சட்டத்தின் கீழ் வழங்கப்படும் படைக்கல உரிமம் பெற ஒருவர் 21 வயது நிரம்பியவராகவும், எவ்வித குற்றவியல் வழங்குகளிலும் தண்டனை அடைந்திராத நல்ல நடத்தை உடையவராகவும், மனநிலை பாதிக்கப்படாத நபராகவும் இருத்தல் வேண்டும்.

பிரிவு 9 :
படைக்கல உரிமம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து, குறிப்பிட்ட கால வரையரைக்குள் காவல் துறையினரின் அறிக்கை மற்றும் சார்நிலை அலுவலரின் அறிக்கை பெறப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் 90 நாட்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் விண்ணப்பதாரருக்கு நேரடி விசாரணைக்கான வாய்ப்பு ஒன்றினை உரிமம் வழங்கு அலுவலரால் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணக்கு பின்னர் படைக்கலம் வைத்துக் கொள்ள உரிமம் வழங்கிடலாம் அல்லது நிராகரித்திடலாம்.

பிரிவு-13 :

பொதுவாக உரிமங்கள் மூன்றாண்டு காலத்திற்கு செல்லதக்கதாகும் குறிப்பிட்ட காரணங்களுக்காக குறைந்த காலத்திற்கும் உரிமம் வழங்கிடலாம். ஒரு உரிமம் எவ்வளவு காலத்திற்கு வழங்கப்பட்டதோ, அதே கால அளவிற்கு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும்.

பிரிவு 15 :

பொருளாதார வசதி இல்லையென்ற காரணத்தின் அடிப்படையில் மட்டும் படைக்கல உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யலாகாது.

பிரிவு-14 :

படைக்கலத்தை விற்கவும் மாற்றம் செய்யவும் உரிமம் பெற்ற நபர் சம்பந்தபட்ட உரிமம் வழங்கிய அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். படைக்கல உரிமம் பெற்ற நபர் காலமாகிவிட்டால் படைக்கலம் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது படைக்கல கிடங்கிலோ பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்