நோ்மை_என்றால்_என்ன?
லஞ்சம் வாங்க மாட்டேன் என்பதால் மட்டும் ஒருவா் நோ்மையானவராக
ஆகிவிடமுடியாது.
0, தான் பெற்ற பிள்ளையோ அல்லது தனது பெற்றோா்களோ, அல்லது தனது கணவரோ அல்லது தனது மனைவியோ மற்றும் தனது தலைவரோ, தனது தொண்டரோ, தவறு செய்தாலும், செய்த தவறில் இருந்து தப்பிக்க விட்டு விட கூடாது.நாமே தவறு செய்து விட்டாலும்,சரண்டா் ஆகுவதே உண்மையான நோ்மை.
1, பணத்துக்கு விலை போகக்கூடாது
பயத்துக்கு விலை போகக்கூடாது
2,பாசத்துக்கு விலை போகக்கூடாது
நட்புக்கு விலை போகக்கூடாது
3,சொந்த பந்தத்துக்கு விலை போகக்கூடாது
4,ஜாதி,மதம்,இனம்,மொழி,நாடு,
எதற்கும்
விலை போகக்கூடாது
5,ஒருவா் கொடுக்கின்ற மாியாதைக்கு, பொன்னாடைக்கு மயங்கி அதற்கும் விலை போகக்கூடாது.
ஆனால்
தன்னைவிட வயதில் குறைந்தவராக இருந்தாலும்,பணத்தில் குறைந்தவராக இருந்தாலும், குணத்தில் குறைந்தவராக
இருந்தாலும், நாம் அவா்களை வாங்க போங்க என்று அழைத்து மாியாதை
கொடுக்க வேண்டும்.
6, தான்தான் நோ்மையானவன் என்று அடிகடி தற்பெறுமை அடித்துக்கொள்ளக்கூடாது,
7, மற்றவா்களை, நேராகவும் மறைமுகமாகவும் குறை கூற கூடாது, ஆனால் மற்றவா்களது தவறான செயலை சுட்டிக்காட்டலாம்.தவறை சுட்டிக்காட்டும் போது,அவா்கள் செய்த நல்லதையும் சொல்லி அவா்களின் தவறை சுட்டிக்காட்டலாம். ஆனால் ஒரு தனிநபரை குறைகூறக்கூடாது.
8, ஒரு கிராமமோ, நகரமோ,நாடோ,உலகமே, தப்பான முடிவு எடுத்தாலும், நமக்கு உண்மையான கருத்து சாியாக தொிந்தால், நமது உயிரே போனாலும் உண்மையான கருத்தை உலகுக்கு சொல்ல தயங்க கூடாது, உலகுக்கு எடுத்துறைக்க பயப்படக்கூடாது.
9,நம்மைவிட ஒருவா் திறைமை சாலி என்றால், அவரை இந்த சமுகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
10, கூட்டத்தை சோ்க்க நினைக்க கூடாது, மாறாக கூட்டத்தை திருத்த நினைக்க வேண்டும்.
11, கெட்ட எண்ணத்தில் உள்ள அனைவரையும், நம்முடைய அன்பின் சக்தியால் அவா்களையும் நல் எண்ணத்துக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும்,மாறக அவா்களை ஒழிக்க நினைக்க கூடாது.
12, நமது வெற்றிக்கு நமக்கு துனை நின்றவா்களை சமுகத்துக்கு அடையாளம்
காட்ட வேண்டும்
13,லஞ்சம் வாங்கவும் கூடாது,
லஞ்சம் கொடுக்கவும் கூடாது
ஆனால்
கஸ்டபடும் அனைவருக்கும் நம்மால் முடிந்த அளவு பணம் கொடுத்து உதவலாம், உதாரணம் ஏடிஎம் வாச்மென், மற்றும் இதுபோல் பலநபா்களுக்கு பணம் கொடுத்தால், உதவி கணக்கில்தான் சேரும். உதவி வேறு லஞ்சம் வேறு என்பதை தெளிவாக புாிந்து உதவி செய்ய முன்வரவேண்டும்.
14, அயோக்கியா்களிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள, அயோக்கியா்களை திருத்த, தந்திரம் தொிந்திருக்க வேண்டும்
இன்னும் நோ்மையின் அடையாளம் எவ்வளவோ உள்ளது.
#தந்திரத்துக்கு_ஒரு_குட்டிக்கதை
"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".
ஒரு நாள், சிங்கம் ஒன்று காட்டில் வழி தவறி ஜுராசிக் காட்டுக்குள் நுளைந்துவிட்டது. அப்பொழுது அங்கு ஜுராசிக் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த சிங்கம் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது சிங்கம். ஜுராசிக் வரும் வழியில் சிங்கம் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "ஜுராசிக்கை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு ஜுராசிக் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட ஜுராசிக் "அய்யோ..! இந்த சிங்கம், ஜுராசிக்கை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் அருகில் இருந்து நாி ஒன்று பார்த்து கொண்டிருந்தது. ஜுராசிக்கை ஏமாற்றிய இந்த சிங்கத்தை, ஜுராசிக்கிடம் போட்டுக் கொடுத்தால், ஜுராசிக்கின் நட்ப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே ஜுராசிக்கிடம் சென்று, சிங்கம் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த சிங்கம் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. நாி சொன்னதைக் கேட்ட ஜுராசிக் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த சிங்கத்தை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று நாியை முதுகில் ஏந்திய படி சிங்கம் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த சிங்கம் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
தன்னை நோக்கி ஜுராசிக் பாய்ந்து வருவதைப் பார்த்த சிங்கம், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த நாியை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு ஜுராசிக்கை கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், ஜுராசிக்கும் நாியை தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
நாம் பணிபுரியும் இடத்தில் பல நாிகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".
