ஒரு குடும்பத்தில் 6 சகோதரர்கள் இருந்து, 7 சகோதரிகள் இருந்து, அவர்கள் அனைவரும், அந்த குடும்ப சொத்துக்கு கூட்டு உரிமையாளர்கள் ஆவர். ஆனால், ஆண்கள் மட்டும், வருவாய்த்துறை ஆவணங்களில், தங்கள் பெயரை மாற்றி கொண்டனர். அதன் பிறகு, அதை வைத்து, சொத்தை விற்பனையும் செய்து விட்டனர்.
பெண்கள், தங்களுக்கு தெரியாமல், தங்கள் சகோதரர்கள் இவ்வாறு செய்தது கிரிமினல் குற்றம் என்று சொல்லி, அவர்கள் மீதும், சொத்து வாங்கியவர் மீதும், கிரிமினல் வழக்கு பதிந்தனர்.
அது, சிவில் nature என்று, சகோதரர்கள், உயர்நீதிமன்றத்தில் தங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு செய்த போது, இந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வேண்டும் என்றே, சகோதரர்கள் கெட்ட எண்ணத்துடன், வருவாய் துறை ஆவணங்களில் பெயர் மாற்றி, சொத்தில், பெண்கள் பங்கையும் சேர்த்து விற்றுள்ளது கிரிமினல் குற்றம் என்று, சகோதரர்கள் மனுவை, ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
