ஒரு வங்கி லாக்கரை, அந்த லாக்கர் உரிமையாளர் இறந்த பிறகு, succession certificate வாங்கி வர சொல்லி, வங்கி கேட்கலாமா? (மீள் பதிவு !)
=====================================பொதுவாக, வங்கி, லாக்கர் உரிமையாளர் இறந்து போனால், அந்த லாக்கர் operate செய்ய அல்லது திறக்க, வங்கி, succession certificate வாங்கி வர சொல்லி சொல்லும். ஆனால், லாக்கர் என்பது ஒரு கடன் அல்ல. அதனால், நீதிமன்றம், இந்த காரணத்துக்கு, இறந்தவரின் வாரிசுகளுக்கு, succession certificate வழங்காது. வங்கியும், வாரிசுகளை, அதிக பணம் செலவழித்து அலைய விடவோ அல்லது தங்கள் பாதுகாப்புக்கோ, succession certificate கேட்க கூடாது. அதனால், வங்கி, எப்போதும், ஒரு லாக்கர் திறக்கும்போது, அந்த லாக்கர் பயன்படுத்தும் நபர் வசம் nominee வாங்க வேண்டும். அதனால், அந்த லாக்கர் வைத்திருந்த நபர் இறந்து விட்டால், வங்கி, அந்த nominee ஐ, அந்த லாக்கர் பயன்படுத்த அனுமதிக்கலாம். அப்போது லாக்கரில் உள்ள பொருட்களை, nominee வசம் பொறுப்பாக வைத்திருக்க ஒப்படைத்து, என்னென்ன பொருள் இருந்தது என்று ஒரு லிஸ்ட் வங்கி வாங்கி கொள்ள வேண்டும். மேலும், வங்கி கேட்கும்போது, அதை nominee கொடுக்க வேண்டும். (அசல் வாரிசுகள், நீதிமன்றம் மூலம், அந்த பொருளுக்கு உரிமை கொண்டாடி வரும் பட்சத்தில்)
இப்படி செய்யும் பட்சத்தில், பண செலவு இருக்காது, கால விரயம் இருக்காது என்று கூறி, ஒரு வங்கி லாக்கர் operate செய்ய, நீதிமன்றம் succession certificate வழங்க முடியாது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி உள்ளது.