பகுத்தறிவாளனும்,ஆன்மீகவாதியும் எனது பார்வையில்!
ஆக்கிய பொருள் இருக்கிறது!ஆக்கியவன் இல்லை என்பது அறிவியலுக்கு பொருந்தாது!ஆகவே ஆக்கியவன் இருக்கிறான் என்று அறிவியல் ரீதியாக நம்புவான்! இயற்கையையே இறைவன் என்பான்!
ஆத்திகன் தனது உணர்வுகள்,பயம்,ஆசை,பாசம்,தேவை
இவைகளுக்குத் தக்கவாறு இறைவனை இவன் படைத்துக்கொள்வான்!பகுத்தறிவாளன்,இறைவன்படைப்பில் மனிதன் ஒரே இனம் என்பான்!
ஆன்மீகவாதி தனது தேவைகளுக்குத்தக்கவாறு பலசாதிகளையும்,மதங்களையும் உருவாக்கி,மனிதர்கள் பல இனம் என்பான்!
பகுத்தறிவாளன்,ஒருசக்திக்கு,அதே அளவிலான எதிர்வினை சக்தி உண்டு
என்றஅறிவியல் தத்துவத்தின்படி,நாம் செய்யும் நல்லவை கெட்டவைகளுக்கு
எதிர்வினை உண்டென்பான்!
ஆன்மீகவாதி என்ன தவறு செய்தாலும்,இவன் கட்டிய ஆலயத்திற்கு
சென்றுவிட்டால்,எல்லாதவறுகளும் மன்னிக்கப்படும் என்பான்!
பகுத்தறிவாளன் இயற்கை சரியாக பிழையின்றி அதன் போக்கில் சுழன்று கொண்டுள்ளது!மாற்றஇயலாது என்ற
நம்பிக்கையில்,எல்லாமே விதிப்படிதான் நடக்கும் மாற்ற இயலாது,அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று இயற்கை எனும் இறைவனை நம்புவான்!
ஆன்மீகவாதி,இறைவனை நம்பாது மனிதன் உருவாக்கிய ஜாதகத்தை
வைத்து இறைவனை வெல்லமுடியும்
என்று நம்புவான்! பகுத்தறிவாளன்,இறைவனை தரிசிக்க
அவன்படைத்த நயாகரா நீர்வீழ்ச்சி,ஆல்ப்ஸ் மலை போன்ற இறைவனின் படைப்பை ரசிப்பான்!
ஆத்திகனோ மதான்கட்டிய கோவிலின்
உயரத்தையும்,சிற்பங்களையும் ரசிப்பான்,
பகுத்தறிவாளன் தனது வழியில் தவறு நடந்தால் இறைவனின் படைப்பான தனது மூளையை உபயோகித்து மாற்று வழிகாண்பான்! ஆன்மீகவாதி தவறு நடந்தால்,அதைத்தீர்க்க சாமியாரிடம் தஞ்ச மடைவான்!
மொத்தத்தில் பகுத்தறிவாளன்
இறைநம்பிக்கை உள்ளவன்!
ஆன்மீகவாதி,இறைவன் தான்படைத்த சிலைகளும்,சாமியார்களுமே என்பான்!
இறை நம்பிக்கையே இல்லாதவன்
இது முற்றிலும் எனது அனுபவத்தில் உணர்ந்தது!
இவன் சாமியப்பன்!