Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

ஊழல் கறை படியாத உத்தமர், நேர்மையாளர் மாணிக் சர்க்கார்

இன்று "ஐயகோ! ஊழல் கறை படியாத உத்தமர், நேர்மையாளர் மாணிக் சர்க்கார் அரசைத் தோற்கடித்து விட்டார்களே, எனப் பொங்கிப் புலம்பும் மார்க்ஸிஸ்டுகள்...

1967-ல் தமிழகத்தில் காமராஜ் தலைமையிலான காங்கிரசை வீழத்தவும்: ஊழல் குற்றச்சாட்டு என்பதே துளியும் இல்லாத அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் மற்றும் இதர ஊழல் புகாரே கூற முடியாத கக்கன், ஆர். வெங்கட்ராமன், மஜீத் உட்பட அத்தனை காங்கிரஸ் அமைச்சர்களையும் தோற்கடிக்கவும்: ( அமைச்சர்களில் பூவராகன் மட்டும் தோற்காமல் தப்பினார்): கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் காமராஜரையே அவரது சொந்த ஊரில் தோற்கடிக்கவும்: எத்தனையோ உள்கட்டமைப்பு திட்டங்கள் -அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் கொண்டு வந்தும் துளிக்கூட கமிஷன் பேரக் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத காமராஜரையே தோற்கடிக்கவும்: இலவசப் பள்ளிக்கல்வி, இட ஒதுக்கீடு, மதிய உணவுத் திட்டம்.. இவ்வளவும் கொண்டு வந்த காமராஜரை 'அரிசிப் பஞ்சம்'- 'இந்தி எதிர்ப்பு'...- இந்த இரண்டையும் வைத்தே அடுக்குமொழியில் வித்தகம் பேசி வீழ்த்திய திமுகவுக்கு துணை போனவர்கள்தானே மார்க்சிஸ்டுகள்!

அப்பழுக்கில்லாத காமராஜரின் திருமலைப் பிள்ளை ரோடு வாடகை வீட்டைப் படம் பிடித்து, "பாரீர், பாரீர் ஏழைப் பங்காளர் காமராசரின் சொகுசு பங்களா பாரீர்!"- என்று திமுக போஸ்டர் ஒட்டியபோது, இதை நாங்கள் ஏற்கவில்லை எனக் கூறாமல், கூசாமல் கூட்டணி தர்மம், மௌனம் காத்து காமராஜரை வீழ்த்த திமுகவுடன் 1967 ல் கூட்டணி போட்டவர்கள்தானே மார்க்சிஸ்டுகள்? "ஆந்திரா பேங்கில் காமராஜ் கோடி ரூபாய் வைத்திருக்கிறார்"- என்று திமுக பிரச்சாரம் செய்தபோது கூட்டணி மேடையில் அதை மார்க்சிஸ்டுகள் மறுக்கவா செய்தனர்?

அதுவும் எப்பேர்ப்பட்ட கூட்டணி? கம்யூனிசக் கொள்கைக்கு நேர் எதிரான "சுதந்திரப் பொருளாதாரத்தை" அன்றே வலியுறுத்திய - திராவிட பாஷையில் சொன்னால் 'குலக் கல்வித்' திட்டம் கொண்டு வந்த 'தர்ப்பைப் புல் பார்ப்பனர்'- 'குல்லுக பட்டர்' ராஜாஜியுடன்- சேர்ந்து 1967 ல் கூட்டணி போட்டு, அப்பழுக்கற்ற காமராஜரைத் தோற்கடித்தவர்கள் ஆயிற்றே மார்க்சிஸ்டுகள்!

'தனிப்பட்ட மனிதரின் நேர்மை என்பது விஷயமல்ல: அரசியல் என்பது கொள்கைகள் இடையிலான மோதல்: அன்றைய நிலையில் காங்கிரஸ் என்பது வீழ்த்தப்பட வேண்டிய சக்தி'- இது 1967 ஆம் வருடத்து வசனம்!

ஆம், அதே வசனம்தான் - "தனிப்பட்ட மனிதரின் நேர்மை என்பது விஷயம் அல்ல: இன்றைய நிலையில் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை CPM என்பது ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டிய சக்தி"- என்று அந்த மாநில மக்கள் தீர்மானித்தார்கள்!

1967-ல் நீங்கள் தமிழகத்தில் வைத்த அரசியல் பாடத்திட்டத்தை, திரிபுராவில் இப்போதுதான் படித்து இருக்கிறார்கள்! மாணிக் சர்க்காருக்கு வந்தால் ரத்தம்! காமராஜருக்கும், கக்கனுக்கும் வந்தால் தக்காளி சட்னியா?

நன்றி.முரளி சீத்தாராமன் ஜீ.
www.lawyerchennai.com