ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதி வசமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுமாறு வாதி கோர முடியுமா?
சேலம் முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வாதி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரி ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வாதி ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்து, 4 மற்றும் 5 பிரதிவாதிகளின் வசமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த இடைக்கால மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து வாதி இந்த சீராய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. K. இரவிச்சந்திரபாபு விசாரித்தார்.
கீழமை நீதிமன்றத்தில் வாதி உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 16 விதி 1(i) முதல் (4) வரையுள்ள பிரிவுகளின் படி, 4,5 பிரதிவாதிகளின் வசமுள்ள இரண்டு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிபதி, வாதி 4,5 பிரதிவாதிகளின் வசம் ஆவணங்களை பெறுவதற்கு விண்ணப்பம் எதுவும் தரவில்லை என்றும், அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றத்தின் மூலமாக அந்த ஆவணங்களை பெறுவதற்கு மனுத்தாக்கல் செய்திருப்பது சரியானதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது.
வாதி யாரிடமிருந்து ஆவணங்களை பெற்று நீதிமன்றத்தில் குறியீடு செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் ஏற்கனவே வழக்கில் பிரதிவாதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களிடமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிட கீழமை நீதிமன்றத்திற்கு எந்த தடையும் இல்லை. வழக்கை முறையாக விசாரிப்பதற்கு வழக்கு சம்மந்தப்பட்டவர்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் தான் நீதிமன்றம் அந்த வழக்கில் சரியான ஒரு முடிவுக்கு வர இயலும். எனவே வாதியின் இடைக்கால மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தவறு என்று கூறி வாதியின் சீராய்வு மனு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
CRP. NO - 3582/2009
காஞ்சிநகர் குடியிருப்போர் உரிமையாளர்கள் நலச்சங்கம் Vs M. இராஜா மற்றும் பலர்
http://www.lawyerchennai.com