Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

வழக்கறிஞர்களை கொச்சையாக்கும் 'கார்ப்பரேட் அடிமை ஊடகங்கள்'-

வரம்பு மீறும் மீடியாக்கள்-
வழக்கறிஞர்களை கொச்சையாக்கும் 'கார்ப்பரேட் அடிமை ஊடகங்கள்'-

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் ஆளாளுக்கு ஏதோ பேச சில மீடியாக்களோ  சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஆதாரமில்லாத, பொய்யான ஆரூடம் சொல்லிக்கொண்டு திரிகிறது!

நீதிமன்ற தீர்ப்புகள், வழக்கறிஞர் போராட்டங்கள் என எதையுமே மக்கள் சமூகம் முன் கொண்டு போகாத இந்த ஊடகங்கள், வழக்கறிஞர் சமூகத்தை இழிவாக்கும் நோக்கத்தோடு கடந்த ஒரு வார காலமாக இத் தேர்தல் பற்றி படு கேவலமாக எள்ளி நகையாடி வருவது வேதனை! 

19/2/2009 நிகழ்வை நேரில் கண்ணால் பார்த்தும் கூட யாருக்கோ சொம்படிக்க, வழக்கறிஞர்களுக்கு எதிராக இந்த சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டதை யாராலும் மறக்க முடியாது! 

50-60 களில் கக்கன், ஜிடி நாயுடு போன்ற மகான்களின் மக்கள் சமூகத்திற்கான மாபெரும் உழைப்புகளை எல்லாம் மழுங்கடித்து, கூத்தாடிகளை கூரையேற்றி கூவ வைத்து சமூகத்தை கூவமாக்கி கொண்டாடிய இந்த வக்கற்ற ஊடகங்கள் இன்றைக்கு வழக்கறிஞர் சமூகத்தை கேலிச் சித்திரமாக்குவது பெரும் அபத்தம்! 

தாது பஞ்சம்,உணவுக் கலப்படம்,விவசாய வீழ்ச்சி,தண்ணீர் கொள்ளைகள், காற்று மாசு, கார்ப்பரேட் கொள்ளைகளை  எல்லாம் பேச, எழுத  யோக்கியதை இல்லாத திராணி இல்லாத ஊடக ஓநாய்கள் எல்லாம் எமது வழக்கறிஞர் சமூகம் பற்றி ஆதாரமில்லாத அவதூறுகளை பேச எவ்வித அருகதையும் இல்லை! 

மக்கள் சமூகத்திற்கு, சட்ட நீதத்திற்கு என்றும் முன் நிற்கும் வழக்கறிஞர்களை இழிப்படுத்த முற்பட்டோரெல்லாம் கடந்த காலங்களில் சமூக அடையாளம் இழந்து போன வரலாறுகள் பல உண்டு! 

ஆக, மீடியாக்களே உங்களின் பொய்யான ஊடக ஊளைகளை இதோடு நிறுத்தி, உங்களின் மேலான சினிமா,நடிக, நடிகைகள்,அரசுக்கான  சொம்புகள், விவாத விந்தைகள்,கார்ப்பரேட் விளம்பரங்கள் என மட்டும் போய் பாருங்கள், 

தேவையில்லாமல் பார் கவுன்சில் தேர்தல் பற்றி தவறான செய்திகளை மக்கள் சமூகம் முன் திணிக்க முயன்றால், அவதூறு வழக்குகள் நிச்சயம் பாயும், என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்! 

அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில், தேர்தல் கமிட்டி மற்றும் தமிழகத்திலுள்ள 248 வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும், இது போன்ற வழக்கறிஞர் சமூகத்திற்கு எதிரான இந்த சில மீடியாக்களின் தொடர்  செயல்களை உடனே கண்டிக்க வேண்டும், வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் , மேலும், இது குறித்து பிரஸ் கவுன்சிலுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் .