தனிநபர் வழக்கில் அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் குற்றவியல் நடுவர் அந்த வழக்கை கு. வி. மு. ச பிரிவு 203 ன் கீழ் தள்ளுபடி செய்து உத்தரவிட முடியுமா?
உச்சநீதிமன்றம் "கேவல் கிருஷ்ணன் Vs சுராஜ் பான்" அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கக்கூடிய வழக்குகளில் கு. வி. மு. ச பிரிவு 203 மற்றும் 204 ன்படி ஒரு குற்றவியல் நடுவர் மேம்போக்காக (Cursory Perusal) அந்தப் புகாரினை பார்க்க வேண்டும் கு. வி. மு. ச பிரிவு 200 மற்றும் 202 ன் கீழ் முதல் கட்ட விசாரணையாக மனுதாரர் தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டும். எதிரிகள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமான சாட்சியங்கள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். எதிரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான முகாந்திரம் உள்ளதா? என்பதை மட்டுமே நீதிமன்றம் பார்க்க வேண்டும். அவ்வாறு அந்த வழக்கில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கினை விசாரிப்பதற்காக அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். சாட்சியங்களின் தன்மை குறித்து குற்றவியல் நடுவர் ஆராயக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் அலகாபாத் உயர் நீதிமன்றம் "ஃபார்மேன் Vs உத்திர பிரதேச மாநில அரசு" என்ற வழக்கிலும் இதே கருத்தை வலியுறுத்தி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
எனவே தனிநபர் வழக்கில் கு. வி. மு. ச பிரிவு 200 மற்றும் 202 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில் வழக்கிற்கான முகாந்திரம் உள்ளதா? என்பதை மட்டுமே குற்றவியல் நடுவர் பார்க்க வேண்டும், மாறாக சாட்சியங்களை பரிசீலனை செய்து வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 1756/2010