Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

அண்ணா நகரில் இருவழி பாதை மீண்டும் துவக்கம்!

அண்ணா நகரில் இருவழி பாதை மீண்டும் துவக்கம்!

அண்ணா நகர் ல் இருவழி பாதை இன்று முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர், 2வது நிழற்சாலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக அண்ணாநகர் 13வது பிரதான சாலை மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பு முதல் அண்ணாநகர் ரவுண்டானா வரையிலும், அண்ணாநகர் ரவுண்டானா சாந்தி காலனி 3வது நிழற்சாலை சந்திப்பு மற்றும் சாந்தி காலனி 13வது பிரதான சாலை சிந்தாமணி நகர் முதல் அண்ணாநகர் ரவுண்டானா வரை உள்ள சாலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருவழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அண்ணாநகரில் மெட்ரோ ரயில் பணி முடிவடைந்ததை தொடர்ந்து அண்ணாநகர் 2வது நிழற்சாலை, சாந்தி காலனி, 3வது நிழற்சாலை, 13வது பிரதான சாலை மற்றும் அண்ணாநகர் ரவுண்டானா முதல் சிந்தாமணி நகர் வரை  இன்று முதல் இருவழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.