Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

குடும்ப நீதிமன்றம் & தேசிய மகளிர் ஆணையம்

குடும்ப நீதிமன்றம் & தேசிய மகளிர் ஆணையம் :-

 குடும்ப நீதிமன்றங்கள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம்
திருமணங்கள் மற்றும் குடும்ப விவகாரங்களில் சமரசத்தை ஊக்கப்படுத்தவும், விரைவான முடிவினை உறுதி செய்யவும் குடும்ப நீதிமன்றங்கள் அமைய குடும்ப நீதிமன்றங்கள் சட்டம், 1984 இயற்றப்பட்டது.

10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங் களுக்கு ஒரு குடும்ப நீதிமன்றம் அமைக்கவும் மாநில அரசு இந்த அதிகார எல்லையைப் பெருக்கவும், சுருக் கவும், உயர்நீதிமன்றத்தைக் கலந்து, அறிவிக்கை பிறப்பிக்கலாம்.

திருமணங்கள் செல்லாது, அல்லது ரத்து செய்யப்பட வேண்டியது, விவாகரத்து, நீதிசார் பிரிவினை சேர்ந்து, வாழ வைப்பது, தம்பதியரின் சொத்து பற்றிய பிரச்சினை வாழ்க்கைப் பொருளுதவி, ஒரு நபரின் சட்டபூர்வத் தன்மை, இளவருக்கான காப்பாளர் போன்ற பிரச்சினை கள் அடங்கிய வழக்குகள் இந்நீதிமன்றத்தில் தீர்வு செய்யப்படும்.

இந்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளால் முதலில் சமரசத் தீர்வுக்கே முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். சமரசம் எட்டும் வரை வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படலாம். உரிமையியல் விசாரணை முறைச் சட்டத்தோடு குற்றவியல் விசாரணை முறை சட்டமும், மற்ற சட்டவிதிகளுக்குட்பட்டு, பயன்படுத்தப்படலாம். விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடைபெறக்கூடாது. ரகசியமாக தனி அறையிலேயே நடைபெற வேண்டும்.

நீதிமன்றம் விசாரணையின் போது, மருத்துவ நிபுணர் அல்லது வேறு பொருத்தமான நபரை உதவிக்காக அமர்த்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் சட்ட நிபுணரின் உதவியையும் நாடலாம்.

இந்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையடு செய்யலாம். தீர்ப்பு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்ய வேண்டும். ஆனால் இருதரப்பார் ஒப்புதலின் பேரில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செயய முடியாது.

தேசிய மகளிர் ஆணையம்
இந்த ஆணையம் 1990-இல் மத்திய அரசால் அமைக் கப்பட்டது. பெண்ணுரிமைக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தலைவராகவும், திறமை, ஒழுக்கம், சட்ட அறிவு, தொழிற்சங்கம் மற்றும், மகளிர் அமைப்பு களில் ஈடுபாடு உள்ளவர்களால் அய்ந்து பேர் உறுப்பினர் களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந் தவராக இருக்க வேண்டும். மத்திய அரசு செயலாளர் மத் திய அரசின் குடிமைப்பணி அலுவலர் உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்படுவர். இவர்களது பதவிக் காலம் மூன்றாண்டுகள்.

இந்த ஆணையத்தின் பணிகள்
(1) அரசியல் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் மகளிருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புகள தொடர்பாக புலன் விசாரணை செய்து ஆயவு செய்ய வேண்டும்.

(2) மேற்கண்ட பாதுகாப்புகள் எவ்வாறு செயல்படு கின்றன என்பது பற்றி ஆண்டு தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

(3) மேற்கண்ட பாதுகாப்புகள் எவ்வாறு செயல்படு கின்றன என்பது பற்றி ஆண்டு தோறும், மத்திய அரசுக்கு அறிக்கை, மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைகள் செய்ய வேண்டும்.

(4) தற்போதுள்ள அரசியல் சட்டம் மற்றும் இதர சட்டஙகளில் உள்ள பாதுகாப்பு பற்றிய பிரிவுகள் அய்யப்பாடுள்ளதாக போதுமானதாக இல்லாமல் அல்லது குறைபாடு உள்ளதாக இருந்தால் அதைப் போக்க வகை செய்யும் திருத்தங்கள் பற்றிய மறு ஆயவு அவ்வப்போது செய்யப்படவேண்டும்.

(5) அரசியல் சட்டம் மற்றும் இதர சட்டப்பிரிவுகள் மீறப்படுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

(6) மகளிர் உரிமைகள் மறுக்கப்படுமானால் பாதுகாப்பு குறித்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால், மகளிருக்கான நலன்கள் பரிகாரங்கள் தொடர் பான அரசின் கொள்கை முடிவுகள், வழிகாடடுதல்கள் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை நிறைவேற்றாமல் இருந்தால் இந்த ஆணையம் தன்னிச்சையாக அப்புகார் களைக் கவனத்தில் கொண்டு தொடர்புடைய அதிகாரி களிடம் இவவிசயத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

(7) மகளிருக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் கொடு மைகளை அறிய ஆய்வு அல்லது புலன் விசாரணைகள் மேற்கொண்டு அவைகளைக் களைய என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்ய வேண்டும்.

(8) மகளிர் மேம்பாடு மற்றும் கல்வி பற்றிய ஆராய்ச் சிகளை மேற்கொண்டு, அனைத்துத் துறைகளிலும் மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து மகளிருக்கான ஆரோக்கியத்தை பாதுகாத்து அவர்களது படைப்புகளை அதிகப்படுத்த உறுதி செய்ய வேண்டும்.

(9) மகளிருக்கான சமூக-பொருளாதார முன்னேற்றத் திற்கான திட்டமிடுதலில் பங்கு பெற்று ஆலோசனை வழங்க வேண்டும்.

(10) மத்திய, மாநில அரசுகளின் கீழ் மகளிர் முன் னேற்றத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

(11) சிறைச்சாலை, பெண்கள் காப்பகம், போன்ற இடங்களில் பார்வையிட்டு பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.

(12) பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு நிதி உதவி செய்யவேண்டும்   (இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது)