பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து புதிய சட்டம்பற்றி 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு...
கடந்த வெள்ளி கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலையில் பணிக்கு சென்ற மென்பொருள் பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் மர்ம வாலிபரால், கொடூரமாக வெட்டி கொலை செய்யபட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
இந்த கொலை குறித்து நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் சண்முக வேலாயுதத்தை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தனர். விசாரணை முறையாக இல்லை என இந்த கோர்ட் கருதினால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சுவாதி கொலை வழக்கை கண்காணிக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும், புலன் விசாரணையில் இன்னும் இரண்டு தினங்களில் குறிப்பிடும் வகையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று தமிழக போலீசாரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். சுவாதி கொலை சம்பவத்தை தொடர்ந்து பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடுகள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் 10 கேள்விகளுக்கு விடை காணும்படி கோரிக்கை முன்வைத்து, தலைமை நீதிபதி கவுலுக்கு, நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ள பத்து கேள்விகளின்
1. அறிவியல் வளர்ச்சி இவ்வளவு தூரம் வளர்ந்துள்ள நிலையில், அதை முழுமையாக பயன்படுத்தி பொதுமக்களுக்கான பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யாதது ஏன்?
2. தேவையான உபகரணங்களுடன் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை ஒருங்கிணைக்கும் நவீன கட்டுப்பாட்டு அறையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியை ஏன் ஒதுக்கப்படவில்லை?
3. இதுவரை எத்தனை இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது?
4. இன்னும் எத்தனை இடங்களில் இந்த கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும்?
5. போர்கால அடிப்படையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்வடும்?
6. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களை தடுக்க, காவல்துறையும், பாதுகாப்பு படைகளும் அவசியம் என்பது தெரிந்தும் ரெயில்வே மற்றும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
7. ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பொது இடங்கள், சாலை சந்திப்புகளை இணைக்கும் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறையை ஏன் உருவாக்க கூடாது?
8. சாலைகள். முக்கிய சந்திப்புகளில் ரகசிய கேமிராக்களை பொருத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள், உயிரிழப்புகளை தடுக்க மாநில அரசு ஏன் நடவடிக்கைகள் எடுக்க கூடாது?
9. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த, தனியார் நிறுவனங்களை குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகளிகளுக்கு அழைப்பு விடுத்து நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது?
10. ஆந்திர அரசு கொண்டு வந்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துதல் சட்டம் -2013 போன்று, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தகைய சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு ஏன் உத்தரவிடக் கூடாது? அல்லது இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு ஏன் இயற்ற கூடாது? . இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பத்து கேள்விகளுக்கு விடை காணும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடும்படி தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தை, வழக்கு மனுவாக பதிவு செய்து, ஐகோர்ட் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் தானாக முன்வந்து சூ மோட்டா வழக்காக இதனை விசாரித்தனர். அப்போது, நீதிபதிகள், தங்களின் சக நீதிபதி ஒருவர், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக எழுப்பியுள்ள பத்து கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்டு 4 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர். 👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼
www.legalfirm.in
