போலீசாருக்கு ஒரு ஆண்டு ஜெயில்!
பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களு அனுப்பியுள்ள அறிக்கையில் 'போலீஸ் நிலையங்கள் சென்று பொதுமக்கள் (ஆண் அல்லது பெண்) கொடுக்கும் புகார்கள் மீது, போலீசார் காலம் தாழ்த்தாமல் வழக்கு (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து விட்டு குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய மறுக்கப்பட்டால், பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க வகை செய்யப்படும். மாநில அரசுகள் இந்த நடவடிக்கையை கடுமையாக பின்பற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
www.askadvocates.com