இந்திய பார் கவுன்சில் வெளியிட்ட (Bar council of India Certificate and Place of Practice (Verification) Rules, 2015.) Form A-ல்,
ஒரு வழக்கறிஞரானவர் கடந்த ஐந்து வருடங்களாக வக்கீல் தொழில் பண்ணுகிறார் என்று பார் அசோசிஸயன், சான்றளித்தால் போதுமானது
அல்லது பார் அசோசியேஸன் இல்லாமல் பார் கவுன்சில் உறுப்பினர்களிடையே கையெழுத்து வாங்கி சமா்பித்தால் ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு வக்கலாத்து நகல் சமர்பிக்க வேண்டும் என்று உள்ளதாகவும், ஆனால் தற்போது அனைவரும் ஐந்து வருடங்களில், ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்த ஒரு வக்கலாத்து நகல் இணைக்கப்படவேண்டும் என்று சொல்கின்றார்களே, எது சரியானது? (Whether only Bar Association certificate is enough or one must submit one vakalat per year for the last 5 years) அறிந்தவர்கள் விபரம் வழங்கவும்.
இளம் வழக்கறிஞர்கள் பலர் தங்கள் சீனியரிடம் இளநிலை வழக்கறிஞர்களாக பணிபுரியும்போது அவர்கள் வக்கலாத்தில் கையொப்பபம் இட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது (அதிக அளவில் இளநிலை வழக்கறிஞரகள் இருக்கும்போது, முதுநிலை நிலையில் இருப்பவர்கள் மட்டுமே கையொப்பம் இடுவார்கள்.) இந்த நிலையில் இளநிலை வழக்கறிஞர்கள் வக்கலாத்து நகல் சமர்பிப்பது கடினமாக இருக்குமே? அப்போது சீனியரிடம் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி அளித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படுமா? அறிந்தவர்கள் விளக்கம் தரவும்.
www.askadvocates.com
www.askadvocates.com
