இனி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்குஅஞ்சாமல் நேர்மையாக செயல்பட வழி ஏற்பட்டுள்ளது.நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று நம்புவோம் !
புதுடில்லி,:இனி, பிரதமர் மோடியின் உத்தரவின்றி, மத்திய அரசு பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய முடியாது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.ஓ.எஸ்., போன்ற குடிமைப்பணி அதிகாரிகள், அச்சமின்றி பணியாற்றவும், அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் பந்தாடப்படுவதை தடுக்கவும், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புதிய விதிமுறைகளை, மத்திய அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரின்
அனுமதியுடன், மத்திய சீராய்வுக் குழு பரிந்துரைப்படி மட்டுமே, மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட்செய்யலாம்.மாநில அரசுகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.ஓ.எஸ்., அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்தால், அதுகுறித்து, 48 மணி நேரத்திற்குள், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடுத்த, இரு வாரங்களுக்குள், முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அத்தகைய அதிகாரிகளின் சஸ்பெண்ட் காலம், மூன்று மாதங்களில் இருந்து, இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் நீட்டிப்புகாலம், ஆறு மாதங்களில் இருந்து, நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தை, பிரதமர்
மோடி கவனித்து வருகிறார்; இணை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, ஜிதேந்திர சிங் உள்ளார். இந்த அமைச்சகத்தின் கீழ், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை உள்ளது.
அதனால், இனி, பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய முடியும்.இதன் காரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் நேர்மையாக செயல்பட வழி ஏற்பட்டுள்ளது.
www.lawyerchennai.com