சோள பணியாரம் செய்வது எப்படி?.
தேவையான பொருட்கள்:
1. சோளம் - 4 பங்கு
2. உளுந்து - 1 பங்கு
3. வெந்தயம் - 10 கிராம்
செய்முறை: இந்த குறிப்பிட்ட மூன்றையும், 4 மணி நேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பது போன்று அரைத்து புளிக்க வைக்க வேண்டும். பின் வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து பணியாரம் சுட்டால் 'கார பணியாரம்' மாறாக தேவைகேற்ப பனைவெல்லதை கரைத்து இலக்கை சேர்த்து மாவில் கலந்து பணிகாரம் சுட்டால் அது இனிப்பு பணியாரம்.
